அரியலூர், ஜூன் 9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன். இவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.
இவர் கட்சி நடத்திய பல்வேறு போராட் டங்களில் பங்கேற்று, அதில் வெற்றி கண்ட வர். பட்டியல் வகுப்பு மக்களுக்கு துணை யாக நின்று, அவர்களின் அடிப்படை பிரச்ச னைகளை போராடித் தீர்த்து வைத்தவர். இவரது முதலாம் ஆண்டு நினைவு தினத் தையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சியினர் சின்ன வளையம் பேருந்து நிறுத்தத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிவேல், டி.அம்பிகா, மூத்த நிர்வாகி எஸ்.என்.துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மகாராஜனின் மகன் ஜோதிபாசு, மகள் சீதா மற்றும் சின்னவளை யம் கிராமவாசிகள் உள்ளிட்ட பலர், மகா ராஜனின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.