அரியலூர், அக்.14 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்கராயநல்லூர் கிராமத் தில், அரியலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், தேவாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், அங்கராயநல்லூர் சாவடி தெருவில் 196 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெ றும் வகையில் புதிய பகுதி நேர நியாய விலை கடை யினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் திறந்து வைத் தார். இதில் பொதுமக்க ளுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் உத்திரக்குடி மேலத்தெருவில் 15-வது நிதிக்குழு மானிய நிதி திட்டத்தில் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி யினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கூட்டுறவு துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அற பளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்தாஸ், கூட்டுறவு சார் பதிவாளர் விவேக், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகி ராமன், ஊராட்சி மன்ற தலை வர் சாமிதுரை, கூட்டுறவு சங்க செயலாளர் செல்வம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.