அம்பத்தூர், அக். 2 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஓய்வூதிய திட்டம், யூனிபைட் ஓய்வூதிய திட்டங்களுக்கு எதிராகவும், ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை வென் றெடுக்கும் வரை ஓயமாட்டோம்’ என்றும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், அக்டோ பர் 2 அன்று மாநிலம் முழுவதும் காந்தி சிலைக்கு முன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்களின் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் எஸ். ஸ்ரீகுமார் தலைமையில் ஆவடியில் உள்ள ஓசிஎப் தொழிற்சாலை முன்பு காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வாஜ்பாய் அரசின் அநீதி
அப்போது, ஸ்ரீகுமார் கூறுகையில், “2003-ஆம் ஆண்டு அன்றைய வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான பங் களிப்பில்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 1.1.2004 முதல் ஒன்றிய அரசு பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் எனும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தியது. அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் உள்ளி ட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களி ப்பு முறையிலான பங்குச் சந்தையை நம்பியிருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று போராடி வருகின்றன.
ஊழியர்களின் தொடர் போராட் டத்தினால் ஒன்றிய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் அன் றைய நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையில் குழு அமை த்தது. அந்தக் குழு புதிய ஓய்வூதிய திட்ட த்தில் சில மாற்றங்களை செய்ய பரிந்து ரைக்கும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிந்து ரை செய்யாது என்றும் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், பாதுகாப்பு துறை ஊழியர்களின் கூட்டமைப்பு சோம நாதன் கமிட்டியை புறக்கணித்தது.
‘யூனிபைட்’ என்றொரு ஏமாற்று
இதனிடையே, கடந்த 24.8.2024 அன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எனும் யூனிபைட் ஓய்வூதிய திட்டத்தை தன்னிச்சையாக அறிவித்து, அதை ஒன்றிய அரசு ஊழியர்களின் ஒரு சில தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் அழைத்த கூட்டத்தை சம்மேளனம் புறக்கணித் தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் அமல்படுத்த வேண்டும் என பிரத மருக்கு கடிதம் அனுப்பியது. இரண்டு ஓய்வூதியத் திட்டத்திற்கும் ஒரு வித்தி யாசமும் இல்லை. இரண்டுமே ஊழியர் விரோத திட்டங்களே. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை வென்றெடுப்பதற் கான போராட்டங்களை முன்னெடு த்துச் செல்வது என முடிவெடுத்தது, அதன் முதற்கட்டமாக மகாத்மா காந்தி யடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி சிலைக்கு முன் சங்க மித்து பாதுகாப்புத்துறை ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்” என்றார்.
ஆவடி ஓசிஎப்
ஆவடி ஓசிஎப் தொழிற்சாலை முன் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் தொமுச பொதுச்செய லாளர் முகமது மீரா உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆவடி கனரக தொழிற்சாலை முன்பு சங்கத்தின் தலைவர் முரளிதரன், பொதுச்செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் தலைமையிலும், ஆவடி என்ஜின் தொழிற்சாலை முன் சங்கத்தின் தலைவர் மோகன், பொதுச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலும் உறுதிமொழியேற்பு நடைபெற்றது. இதில் சம்மேளன அமைப்புச் செய லாளர் கிருபானந்தம், செயற்குழு உறுப் பினர்கள் சந்திரமோகன், விஜயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி
திருச்சியில் சம்மேளன துணைத் தலைவர் விஜயன், சங்கத்தின் பொதுச் செயலாளர் இரணியன் ஆகியோர் தலை மையிலும், துப்பாக்கித் தொழிற்சாலை யில் சங்கத்தின் தலைவர் ஜெயபால், பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசுலு தலை மையிலும் உறுதிமொழியேற்பு நடை பெற்றது.