court

img

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.... 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு....

மதுரை:
 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய2 பேரும் சாத்தான்குளம் போலீசா ரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த னர்.இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்தியசிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். அந்த 10  போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதானபோலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர்  மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்குசிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான் குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

;