court

img

ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, உயர்நீதிமன்றமும், சிறை தண்டனையை உறுதி செய்தது.
இதை உயர்நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து, ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ராஜேஷ் தாஸின் மேல் முறையீடு மனு குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

;