ஞானவாபி மசூதியில் இன்று காலை ஆய்வுப் பணிகள் தொடங்க இருந்த நிலையில், ஜூலை 26-ஆம் தேதி வரை இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் கடந்த 21-ஆம் தேதி அனுமதி வழங்கியது. மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ’பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஆய்வு தொடர்பான அறிக்கையை வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசி நீதிமன்ரம் அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்ரத்தில் மசூதி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மசூதி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.