தில்லி முன்னாள் துணை முதல்வ ரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா மதுபானக்கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த பிப்ரவரி 26 (2023)அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். கடந்த 8 மாத காலமாக அவர் தில்லி திகார் சிறையில்உள்ள நிலை யில், மணீஷ்சிசோடியாவின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து வந்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார் மணீஷ் சிசோடியா. இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரி வித்தனர். மேலும் இந்த வழக்கின் விசா ரணை மட்டும் ஏன் இவ்வளவு காலம் செல்கிறது என்று சிபிஐக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், 6 முதல் 8 மாத காலத்திற்குள் வழக்கின் விசா ரணையை முடிக்க வேண்டும் என விசா ரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப் பித்தனர். வழக்கு விசாரணை தொய்வாக நடைபெற்றால் ஜாமீன் கோர மணீஷ் சிசோ டியாவிற்கு உரிமை உள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.