court

img

கேரளாவுக்கு சிறப்புக் கடன் உதவி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு!

கேரளாவுக்கு உடனடியாக சிறப்புக் கடன் உதவி வழங்கவும், எவ்வளவு தொகை வழங்க முடியும் என்பதை நாளை காலை தெரிவிக்கவேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஒன்றிய அரசு, கூட்டாட்சி நிர்வாகத்தை மீறுவதாகவும், உரிய நிதியை வழங்காமலும், கடன் வாங்க அனுமதி அளிக்காமலும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறதாகவும், கேரளாவுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், பொது வெளியிலிருந்து கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை, கேரளாவுக்கு கடன் வழங்க ஒன்றிய அரசு அனுமதிக்கவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கேரளா கோரிய 27,000 கோடியில் 8000 கோடி ரூபாய் கடன் வழங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசு மீதமுள்ள 19,000 கோடி ரூபாய் தங்களுக்கு கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என கேரளா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு உடனடியாக சிறப்புக் கடன் உதவி வழங்க வேண்டும்,எவ்வளவு தொகை வழங்க முடியும் என்பதை நாளை காலை தெரிவிக்கவேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 

;