மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் நீதிபதி நாகரத்னா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதன் மூலம், நீங்கள் என்ன சாதிக்க முயற்சி செய்கிறீர்கள்? நாட்டை கொந்தளிப்பு நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா? நாட்டை நினையுங்கள், மதத்தை அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தெரிவித்தார். அதேபோல், பிரிட்டிசாரின் பிரித்து ஆளும் ஆட்சிக் கொள்கை நம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தியது. அதை நாம் திரும்பிக் கொண்டு வர வேண்டாம் என்று நீதிபதி நாகரத்னா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.