court

img

விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்... இன்று விசாரணை....

புதுதில்லி:
பொய்யான குற்றச்சாட்டில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994 இல் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விஞ்ஞானி நம்பி நாராயணன், தன்னை கைது செய்த கேரள காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை கமிட்டிஅமைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.நீதிபதி ஜெயின் கமிட்டி அதன் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
பின்னர் நடைபெற்ற விசாரணையில் 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை அளிக்க சி.பி.ஐ. இயக்குநருக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.அதையடுத்து, சி.பி.ஐ. கடந்த மே 3 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் கேரள காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.

;