புதுதில்லி, செப். 27 - கடந்த 2022 நவம்பர் முதல் கடந்த 10 மாதங் களில் 70-க்கும் அதிகமான நீதிபதிகள் நியமன த்தை மோடி அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும், இதனால், தகுதிவாய்ந்த நீதிபதிகளை இந்திய நீதித்துறை இழந்து விட்டதாகவும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் மீது கருத்து இருந்தால், அவற்றை கொலீஜியத்திற்கு முறையாக தெரி விக்க வேண்டும்; ஆனால், அந்த கடமையைக் கூட செய்யவில்லை என்றும் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், சுதான்ஷூ துலியா அமர்வு குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகளை பரிந்துரைக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம்
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்ப தற்கான பரிந்துரைகளை, உச்ச நீதிமன்ற தலை மை நீதிபதி தலைமையில் 5 மூத்த நீதிபதி களைக் கொண்ட குழு (கொலீஜியம்) ஒன்றிய அரசுக்கு வழங்கி வருகிறது. இதைப் பரிசீலித்து, ஒன்றிய அரசு முறைப்படி உத்தரவு பிறப்பிக்கும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்தபின், இதில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி வந்தது. பாஜக மற்றும் பாஜக தலைவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர்கள் பட்டியலில் இருந்தால், அந்த பரிந்துரைகளை திருப்பி அனுப்பவும் செய்தது.
4 வார கெடுவை விதித்து ஒன்றிய அரசுக்கு கடிவாளம்
இதனால், “‘கொலீஜியம்’ தனது பரிந்து ரையை மீண்டும் (இரண்டாவது முறையாக) வலியுறுத்திவிட்டால் 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்” என்று கடந்த 2021 ஏப்ரல் 20 அன்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, புதிய உத்த ரவு ஒன்றையும் பிறப்பித்தது. ஆனால், அதன்பிறகும் கூட ஒன்றிய பாஜக அரசு கொலீஜியம் உத்தரவை அமல்படுத்த முடி யாது என்று பிடிவாதமாக மறுத்து வந்தது. இதையொட்டி, ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
சட்டங்களைப் பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, “நீதிபதிகள் நியமனத்தைக் கிடப்பில் போட்டு, ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல்கிறது. மேலிடத்தில் இருப்பவர்கள் (ஒன்றிய அரசின் ஆட்சி யாளர்கள்), தாங்கள் நினைப்பதை செய்வோம் என்று நினைத்தால், நாங்களும் (உச்ச நீதி மன்றம்) நாங்கள் நினைப்பதைச் செய்வோம். எனவே, நீதித்துறை தனது பங்குக்கு முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர் கள். கொலீஜியம் என்பது சட்டம். அந்தச் சட்ட த்தை பின்பற்றுங்கள். சட்டங்கள் இருக்கும் வரை அவற்றை பின்பற்றியே ஆகவேண்டும்” என்று 2022 நவம்பர் 29 அன்று காட்டமாக எச்சரித்தனர். இதனிடையே, பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கா னது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நீதிபதிகள் எஸ்.கே. கவுல் (கொலீஜியத்தில் 2-ஆவது மூத்த நீதிபதி) மற்றும் சுதான்ஷூ துலியா அமர்வில் செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர், வழக் கறிஞர் அமித் பாய் ஆகியோரும், பொதுநல மனு தாக்கல் செய்த என்ஜிஓ தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் ஆஜராகி வாதாடினர். ஒன்றிய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட ரமணி ஆஜரானார்.
நேர்மையான நீதிபதிகளை நீதித்துறை இழந்துவிட்டது
பிரசாந்த் பூஷண், தனது தரப்பு வாதங்களின் போது, “கொலீஜியம் மீண்டும் வலியுறுத்திய 16 பெயர்களை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், நிய மனம் தாமதமாகி வருவதன் காரணமாக, நீதிபதி பதவிக்கு தங்களின் ஒப்புதலை வழங்கி யிருந்த வழக்கறிஞர்கள் பலர், தற்போது அந்த ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்தார். பூஷணின் இந்த வாதத்தோடு உடன்பட்ட நீதிபதி எஸ்.கே. கவுல், “அவர்களில் (வழக்கறி ஞர்களில்) சிலர் ஆர்வத்தை இழந்து விலகு கிறார்கள் என்பது உண்மைதான். இதனால் ஒன்று அல்லது இரண்டு நேர்மையான நீதிபதி களை நீதித்துறை இழந்து விட்டது” என்றார். “கொலீஜியம் அரசாங்கத்திற்கு வழங்கிய பட்டியலில் இருந்து சில பெயர்களை மட்டும் பிரிப்பது மிகவும் சங்கடமானது” என்று வழக்கறி ஞர்கள் அரவிந்த் தாதர் மற்றும் வழக்கறிஞர் அமித் பாய் ஆகியோர் தெரிவித்தனர். “இந்த நிலையை தொடர அனுமதிக்க முடி யாது; நீதிமன்றத்தை அவமதிப்பு செய்பவர் களுக்கு (ஒன்றிய அரசு) எதிராக சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று பிரசாந்த் பூஷண் கூறினார்.
ஒன்றிய அரசால் பதில் கூட அளிக்கமுடியாதா?
அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட ரமணியைப் பார்த்துப் பேசிய நீதிபதி எஸ்.கே. கவுல், உயர் நீதிமன்றங்களில் 70 நீதிபதி பணியிடங்களுக்கு கொலீஜியம் அளித்த பரிந்துரைகளை, நவம்பர் 2022 முதல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் (ஒன்றிய அரசு) வைத்திருக்கிறீர்கள், தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். “உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 70 பணி யிடங்கள் காலியாக உள்ளன. இதன்மீது கொலீ ஜியத்தின் பரிந்துரைகளைப் பெற்றவுடன், நீங்கள் சில அடிப்படைச் செயலாக்கங்களை மேற்கொண்டு, உங்களின் பதிலை உச்ச நீதி மன்ற கொலீஜியத்திற்கு மீண்டும் அனுப்பி யிருக்க வேண்டும். ஆனால், அதைக்கூட நீங்கள் செய்யவில்லை. நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தவர்களைப் பற்றிய உங்களின் பார்வை என்னவென்று தெரிந்தால், நாங்கள் (உச்சநீதிமன்ற கொலீஜியம்) அதனைப் பரிசீலிப் போம்... ஆனால், அதையும்கூட நீங்கள் செய்யவில்லை” என்று எஸ்.கே. கவுல் சாடினார். மேலும், “கொலீஜியமானது, உயர் நீதி மன்றங்களில் 26 இடமாற்றங்களைப் பரிந்துரைத் துள்ளது. நீதிபதி பதவிகளுக்கு 9 பெயர்களை முதன்முறையாகவும் 7 பேரின் பெயர்களை இரண் டாவது முறையாக பரிந்துரை செய்துள்ளது. ஒருவருக்கு தலைமை நீதிபதியாக பதவி உயர் வுக்கான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பரிந்துரைகள் எதுவுமே அரசால் செயல்படுத்தப்படவில்லை. அல்லது அதுதொடர்பாக கொலீஜியத்திற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. 2022 நவம்பர் 11 முதல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக உயர் நீதிமன்றங்களுக்கு மொத்தம் 80 பரிந்துரை களை கொலீஜியம் அளித்துள்ளது. இவற்றில் 10 பரிந்துரைகளை மட்டும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அரசு ஏற்றுக் கொண்டுள் ளது. இப்போதும் 70 பரிந்துரைகளை நிலுவை யில் வைத்துள்ளது. எனவே, 2023 ஏப்ரல் இறுதி வரையிலான பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பாக வாவது, அரசாங்கத்திடம் இருந்து பதில்களைப் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்” என்றும் எஸ்.கே.கவுல் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு 10 நாட்களுக்கு இடையே வழக்கை விசாரிக்க முடிவு
அப்போது, “மிகவும் முக்கியமான நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதியை நிய மிக்கும் பரிந்துரை ஒன்றும் நிலுவையில் உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கவுல், (தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் அரசுக்கு பரிந்துரைத்திருப்பது குறிப்பிடத் தக்கது) “இந்தப் பெயர்களுக்கு என்ன நடந்தது? என்று நீங்கள் கூறும் வரை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வேன்... நீங்கள் (அட்டர்னி ஜெனரல்) அவகாசம் கேட்ட தால் இன்று அதிகமாக எதையும் பேசவில்லை ஆனால் அடுத்த முறை, நான் நிறைய பேசு வேன்” என்று காட்டமாக குறிப்பிட்டார். இவ்வழ க்கு மீதான அடுத்தகட்ட விசாரணையையும் அக்டோபர் 9-ஆம் தேதிக்கு நீதிபதி எஸ்.கே. கவுல் ஒத்திவைத்தார்.