court

img

உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டில் 3 முக்கிய கேள்விகளுக்கு விடை தேவை!

புதுதில்லி, செப்.9- உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், முதலாவதாக, பிரதானமாக எழும் 3 கேள்விகள் குறித்தே உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, பொருளா தாரத்தில் பின்தங்கிய உயர்சாதி யினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் உச்ச  நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள் ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான 5 நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வியாழனன்று நடைபெற்ற விசாரணையின்போது, 10 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கு வதற்கான அரசியலமைப்பின் 103-ஆவது சட்டம் திருத்தத்தில் 3 முக்கியக் கேள்விகள் எழுந்துள்ளதாகவும், முதலில் அதுபற்றியே விரிவாக விவாதிக்கப்படும் என்று அரசியல் சாசன அமர்வு அறிவித்தது. அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கை களை மீறும் வகையில் இந்த சட்டத்தை  திருத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா?  தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு  அரசுக்கு சிறப்பு அதி காரங்கள் வழங்கியதில் அரசி யலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா? இந்த சட்ட திருத்தத்தினால் பிற்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா? - ஆகிய இந்த 3 முக்கிய கேள்விகள் குறித்து  விவாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

;