court

img

உச்சநீதிமன்ற ஊழியர்கள் 50% பேருக்கு கொரோனா தொற்று...

புதுதில்லி:
உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் வழக்கு விசாரணைகளைத் தொடர நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், 904 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தலைநகர் தில்லியில் 10,774 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உச்ச நீதிமன்றவளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நீதிபதிகளும் இனிமுன்புபோல் காணொளியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிப்பதோடு தடுப்பூசி போடுவதையும் துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதற்காக ஏப்ரல் 11 முதல் வரும் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தடுப்பூசித் திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;