court

img

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு

சென்னை, மே 22- கடந்த அதிமுக ஆட்சியில் அமைச் சர்களாக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் மீது  ஒரேநாளில் தனித்தனியே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட் டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகா தாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த 1.4.2016 முதல் 31.3.2021 காலகட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் மொத்தம் ரூ.27,22,56,736  வருமானத்துக்கு அதிகமாக முறை கேடாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப் பற்றப்பட்டது. அதேபோல, விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரிலும் ராசி புளூ மெட்டல்ஸ், ராசி எண்டர்பிரைசஸ் ஆகிய பெயர்களில் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், இயந்திர தளவாடங்கள், வாகனங்கள் மற்றும் ஆபரணங்கள் என முதலீடு செய்து மொத்தம் ரூ.35,79,90,081-க்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று திங்களன்று (மே 22) புதுக் கோட்டை தலைமை குற்றவியல் நீதி மன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

அதேபோல கடந்த அதிமுக ஆட்சி யில் உயர்கல்வித் துறை அமைச்சரும் தற்போதைய பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன் அமைச்சராக இருந்த 1.4.2016 முதல் 31.3.2021 வரையிலான கால கட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோர் பெயரில் மொத்தம் ரூ.11,32,95,755-அளவிற்கு வருமானத் துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங் கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அவரது உறவினர் களான ரவிசங்கர், சரவணன், சரவ ணக்குமார் மற்றும் நெருங்கிய கூட்டாளிக ளான மாணிக்கம், மல்லிகா மற்றும் தனபால் ஆகியோரது பெயரில் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி  இருப்புகள், நிலம், இயந்திர தளவா டங்கள், ஆபரணங்கள், வாகனங்கள் என சொத்துக்களாகவும், முறை கேடாக பெற்ற பணத்தை அவருக்கு சொந்தமான சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பிய தன் வழியாகவும் என மொத்தம் ரூ.45,20,53,363 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிக் கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்  தலைவரிடம் அனுமதி பெறப்பட்டது. அதன்படி, திங்களன்று(மே 22) தரும புரி சிறப்பு நீதிபதி தலைமைக் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 10 நபர்கள் மற்றும் சரஸ் வதி பச்சியப்பன் கல்வி அறக்கட் டளை மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் 2018-ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன்படி உரிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

;