court

img

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு...

புதுதில்லி:
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தனித் தேர்வர்களுக்குதேர்வு நடத்துவதை எதிர்த்து சுமார் 1100 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தலால் சிபிஎஸ்இ  12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.   ஆயினும் தனித் தேர்வர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க தேர்வுகள் நடத்த முடிவுசெய்யப்பட்டது.இதற்கு தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிபிஎஸ்இ அமைப்பின்  இந்த ஏற்பாட்டுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  அந்த ஒப்புதலை எதிர்த்து சிபிஎஸ்இ மீது சுமார் 1100 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்துள்ளனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வை கொரோனாவால் அரசு ரத்து செய்துள்ளது.  ஆனால் தனித் தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கான தகுதித் தேர்வு நடத்த உள்ளது.   இதன் மூலம் அவர்களின் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. இது அனைவரும் நலமாக வாழும் உரிமைக்கு எதிரானதாகும். எனவே ஏற்கனவே வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். ” என்று தெரிவித்துள்ளனர்.

;