court

img

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திஉச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்து சிபிஎஸ்இ அறிவித்தது, அதைத் தொடர்ந்துசிஐஎஸ்சிஇ அறிவித்தது. ஆனால், 12 ஆம்வகுப்புத் தேர்வுகளை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ அறிவித்தன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு  தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மம்தா சர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 12 ஆம் வகுப்புத்தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்-லைனில் அல்லது நேரடியாக தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும்கடினமானது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அப்ஜெப்டிவ் முறையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து எந்தமுடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மனஉளைச்சலை அதிகரிக்கும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், தன்னிச்சையாக, மனிதநேயமற்ற முறையில் எந்த முடிவும் எடுக்காமல் அப்பாவி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடக் கூடாது.ஆதலால், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளைரத்து செய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;