court

img

2015-ல் ரத்து செய்யப்பட்ட ஐடி சட்டம் 66-ஏ பிரிவில் வழக்குப்பதிவு.... உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி....

புதுதில்லி:
2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ இன்னமும் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு தரப்பினர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது என உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் சிவசேனாகட்சித் தலைவர் பால் தாக்கரே மறைவுக்குமும்பையில் பந்த் கடைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகின் தாடா, ரேனு ஸ்ரீனிவாசன் ஆகிய இரு பெண்களும் சமூகவலைதளத்தில் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் மும்பை போலீசார் கைதுசெய்தனர்.இதை எதிர்த்தும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியும் சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்கால் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக சட்டப் பிரிவு இருப்பதாகக் கூறி, ஐடி சட்டத்தில் 66-ஏ பிரிவை ரத்து செய்து 2015 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பளித்தது.இந்த சட்டத்தின் கீழ் மக்கள் யாரும்தேவையில்லாமல் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பின் நகலை நாட்டில்உள்ள அனைத்து மாநில அரசுகளுக் கும், போலீஸ் நிலையங்களுக்கும், அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாவட்ட, விசாரணை நீதிமன்றங்களுக் கும் அனுப்பி வைத்து அதை பின்பற்ற உத்தரவிட்டது.இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் நூற்றுக்கணக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பிரிவில் எவ்வாறு வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் கூறி பியுசிஎல் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குப் பதிவு செய்தது. மேலும், ரத்துச் செய்யப்பட்ட சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் ஃபாலி நாரிமன், கே.எம்.ஜோஸப், பி.ஆர் காவே ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. பியுசிஎல் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் ஆஜரா கினார். ஒன்றிய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார்.அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், “உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66-ஏ இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட பிரிவில் எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய முடியும், அவ்வாறு வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.இதைக் கேட்ட நீதிபதிகள், “2015 ஆம்ஆண்டு ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவில் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறதா? ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுகுறித்து நாங்கள் விரைவில் முடிவு எடுக்கிறோம். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் ” எனத் தெரிவி்த்தனர்.

அப்போது மனுதாரர் வழக்கறிஞர் பாரிக், “இந்தச் சட்டப் பிரிவை ஏற்கெனவேஉச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இருப்பினும் இந்தப் பிரிவில் வழக்குப்பதிவு செய்வதால் ஏராளமான மக்கள்பாதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரி வித்தார்.அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தின் அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ரத்து செய்த பின்பும் ஐடி சட்டம் 66-ஏ பிரிவு நடைமுறையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “இந்த விவகாரம் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். 2 வாரங்களுக்குப் பின் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

;