court

img

கோடிக்கணக்கில் நிதி மடைமாற்றம்

புதுதில்லி, செப். 20 - கல்வி, சுகாதாரத்திற்காக வசூலிக்கப் பட்ட வரி வருவாயை, பிற துறை களுக்கு மடைமாற்றுவது; பெரும்பகுதி நிதியை, இன்னதென்று குறிப்பிடப் படாத பொத்தாம் பொதுவான செல வினங்களின் பெயர்களில் கணக்குக் காட்டுவது; வெளிநாட்டுக் கடன்களை குறைத்துக் காட்டுவது என்று ஒன்றிய பாஜக அரசு பல்வேறு மோசடிகளில் ஈடு பட்டிருப்பதை, மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலரின் (Comptroller and Auditor General - CAG) புதிய அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, 2021-22 நிதியாண்டில், வெளிநாட்டுக் கடன் குறைத்து மதிப் பிடப்பட்டு, ரூ. 2 லட்சம் கோடி கண் மறைப்பு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலர் கூறியுள்ளார். ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் 2021 - 22 நிதியாண்டிற்கான கணக்குத் தணிக்கை அறிக்கையை, கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தலை மை கணக்குத் தணிக்கை அலுவலர் வெளியிட்டார். அதில், பல்வேறு திட்டங் களில் மொத்தம் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவிற்கு மக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டுள்ளது; அரசின் கஜா னாவிற்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்ற உண்மை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த மெகா ஊழல் முறைகேடு கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் ந்து கேள்வி எழுப்பியும் இதுவரை நரேந்திர மோடி அரசு உரிய பதிலளிக் காமல் மழுப்பி வருகிறது. சனாதனம், ஒரே நாடு ஒரே தேர்தல், நாட்டிற்கு பாரத் என பெயர் மாற்றுதல் என சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக் களைத் திசைத்திருப்பி வருகிறது.

அடிக்குறிப்பு மூலம்  ஏமாற்றும் தந்திரம்

இந்நிலையில்தான், 2021-22 நிதி யாண்டிற்கான வெளிநாட்டுக் கடனில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை குறைத்து மதிப்பிட்டு, மோடி அரசு கண்மறைப்பு செய்திருப்பது உள்ளிட்ட புதிய குற்றச் சாட்டுக்களை சிஏஜி முன்வைத்துள்ளார். “அடிக்குறிப்புகளின் மூலம் முக்கிய தகவல்களை சித்தரிப்பது” என்ற தலைப்பில் உள்ள இந்த அறிக்கையில், ஒன்றிய அரசு, முக்கிய தகவல்களை கணக்குகளின் முக்கியப் பகுதியில் தெரிவிக்காமல், அடிக்குறிப்புகளில் மறைக்கும் போக்கை கையாண்டு உள்ளது; தகவல்களில் கடந்து செல்லப்பட்ட விவரங்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை என குறிப் பிட்டுள்ளார்.

ரூ. 2 லட்சம் கோடி கண்மறைப்பு

2021-22 ஆண்டிற்கான அரசின் கணக்குகளின் முக்கிய பகுதியானது, ஒன்றிய அரசின் வெளிநாட்டு கடனை, வரலாற்று பரிமாற்ற விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு ரூ. 4.39 லட்சம் கோடி என்று காட்டியுள்ளது. ஆனாலும், 2022-ஆம் ஆண்டு மார்ச் 3 காலகட்டத்திற்கான பரிமாற்று விகிதத்தில் இந்த கடன் உண்மையில் ரூ.  6 லட்சத்து 58 ஆயிரம் கோடி என குறிப் பிடுகிறது. அதாவது, ரூ. 2 லட்சத்து 19  ஆயிரம் கோடி அதிகமாக இருக்கும் என குறிப்பிடுகிறது. இவ்வாறு ரூ. 2 லட்சத்து 19 ஆயிரம்  கோடி அளவிற்கு கடன் தொகை அதி கரிக்கும் நிலையில், அதனை முக்கி யத்துவம் கொடுத்து குறிப்பிடாமல், போகிறபோக்கில் ஒரு அடிக்குறிப்பில் கூறிவிட்டு ஒன்றிய அரசு கடந்து சென்றுள்ளது.

எப்ஆர்பிஎம் சட்டத்தை மீறும் செயல்

இது நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டம், 2003-இன் கீழ் சட்ட விதிகளை மீறும் செயல் என்று கூறப்படுகிறது. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டம் கொண்டு வரப்பட்டதே, முறையான, நிலையான மற்றும் வெளிப்படையான நிதிக் கொள்கையின் நலன்களைப் பாது காக்க வேண்டும் என்பதுதான். ஆனால், மோடி அரசு அதனைக் கடைப்பிடிக்க வில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு, வெளி நாட்டுக் கடனின் மதிப்பை அடிக்குறிப்பு மூலம் மட்டுமே தெரிவிப்பது கணக்கு களின் வெளிப்படை தன்மையை பாதித்து ள்ளதுடன், சட்டவிதிகளை மீறும் செயல் என சிஏஜி குற்றம்சாட்டி உள்ளது. ஒன்றிய அரசின் கடன் வரையறையில் தற்போதைய பரிமாற்று விகிதங்களில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டுக் கடனும்  அடங்கும் எனவும் சிஏஜி குறிப்பிட்டுள் ளது.

கல்வி, சுகாதார வரி வருவாய் மடைமாற்றம்

மேலும், அரசாங்கத்திற்கு சொந்த மில்லாத நிதிகள், வருங்கால வைப்பு  நிதி மற்றும் சிறு சேமிப்பு சேகரிப்பு களை ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்க  முடியாது. ஆனால், பொதுமக்களிட மிருந்து கல்வி, சுகாதாரத்திற்காக வசூ லித்த வரிகளை முறையாக பயன்படுத்தப் படாமல், அவை தேக்கமடைந்து கிடப்ப தாகவும், அவை ஒன்றிய அரசால் வேறு நோக்கங்களுக்காக தவறாக பயன் படுத்தப்பட்டு உள்ளதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. 

பிற செலவுகள் பெயரில் பெரும்பகுதி செலவு

பல்வேறு துறைகளில் தங்களின் செலவுகளில் பெரும்பகுதியை, ‘பிற செலவுகள்’ என்ற பொதுவான தலைப் பின் கீழ் பட்டியலிட்டு இருக்கிறது. இது கணக்குகளில் வெளிப்படை தன் மையை பாதிப்பதுடன், இதனால் நிர்வா கம் மற்றும் கண்காணிப்பு நோக்கங்களு க்காக செலவுகளை திட்டங்கள் வாரி யாக அளவிட முடியாமல் போகிறது என்றும் மத்திய தலைமைக் கணக்கு  தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை பங்குகள் குறித்தும் தெளிவில்லை பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பங்குகள் குறித்த அரசாங்க த்தின் அறிக்கைக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் அந்தந்த ஆண்டு அறிக்கைகளில் வழங்கப்பட்ட தகவல் களுக்கும் இடையே 15 ‘பொருத்தமின் மை’ இருப்பதை, சிஏஜி கண்டறிந்துள் ளார்.  - விரிவான விபரம் : 5