court

img

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக கலகத்தை ஆரம்பித்த பாஜக!

புதுதில்லி, செப்.10- வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள்  சட்டப் பிரிவுகளை எதிர்த்து, பாஜக வழக்கறி ஞர் அஸ்வினி உபாத்யாய தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள்  அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. “கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு விடுதலையடைந்த போது, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் எந்த தன்மையில் இருந்ததோ, அதில் எந்த மாற்றமும் இல்லா மல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்  டும்” என்று வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் வழிபாட்டுத் தலங்கள் பாது காப்புச் சட்டம் கூறுகிறது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு, கொண்டுவரப்பட்ட இச்சட்டத்  தில்,  அயோத்தியில் ராம ஜென்மபூமி விவகா ரத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், ராமஜென்பூமியை  தவிர, இதர தலங்களுக்கு வழிபாட்டுத் தலங் கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப்படாது என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படும் பட்சத்தில் அந்த வழக்குகள் ஊக்குவிக்கப்படாது என்றும் தீர்ப்பு கூறியது.

இதனிடையே, வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் சில பிரிவு களுக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பா ளர் அஸ்வினி உபத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவ காரங்களில் இந்துக்கள், ஜெயின்கள், பவுத்தர்  கள் மற்றும் சீக்கியர்களுக்கு சட்டரீதியாக தீர்வு  கிடைப்பதைத் தடுப்பதன் மூலம், இந்தியா வுக்கு படையெடுத்தவர்கள் மற்றும் சட்டத்தை  உடைத்தவர்களின் செயல்களை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நிரந்தரமாக பாதுகாக்கிறது. இது அரசமைப்புக்கு முரணானது” என்று அஸ்வினி உபாத்யாய கூறினார். உபாத்யாயவின் இந்த மனு முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களையே மறைமுகமாகக் குறிவைப்பதால், அவரின் மனு மீதான விசா ரணையில் தலையிட்டு, முஸ்லிம் சமூகத்தின ரின் கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரி  ஜம்மியத்-உலமா-ஏ-ஹிந்த் அமைப்பும் மனு தாக்கல் செய்தது. இதுதவிர, காசியின் அரச  குடும்பம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமையன்று விசார ணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும், “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான மனுக்களை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அக்டோபர் 11-ஆம் தேதி  விசாரிக்கும். அதற்குள் தங்கள் வாதங்களை  முன்வைக்கும் பணிகளை மனுதாரர்கள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட னர். இந்த மனுக்கள் தொடர்பாக 2 வாரங்க ளில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஒன்றிய  அரசுக்கும் நீதிபதிகள் அவகாசம் அளித்துள்ள னர்.

;