court

img

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன்!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Academகைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர் விசாரணை அமைப்புகளின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், அவருடைய பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் அவர் வசிக்கக்கூடிய விருதுநகர் தவிர்த்த வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்தும் உத்தரவிட்டனர்.

;