court

img

4 கோடி குடும்ப அட்டைகள் ரத்தால் இந்தியாவில் பட்டினிச் சாவுகள்? 11 வயது குழந்தையை பறிகொடுத்த தலித் தாய் உச்சநீதிமன்றத்திடம் முறையீடு...

புதுதில்லி:
இந்தியாவில் பட்டினிக் கொடுமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் ‘உலக பட்டினிக் குறியீடு - 2020’ கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 107 நாடுகளில் இந்தியா 94-ஆம் இடத்தில், ‘தீவிரமான பட்டினி நிலவும் நாடுகள்’ வரிசையில் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த 2020 அக்டோபரில், ‘உணவுக்கான உரிமை விழிப்புணர் வின் பட்டினிக் கண்காணிப்பு அறிக்கை’ குறிப்பிட்டிருந்தது.

இதையொட்டி பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்த 2014-க்குப் பிறகு, போலி குடும்பஅட்டைகளை நீக்குகிறோம் என்ற பெயரில், ஆதார் எண் இணைக்கப்படாத, பயோமெட்ரிக் விவரங்கள் பொருந்திப் போகாதகுடும்ப அட்டைகளை ரத்து செய்யும் நடவடிக்கைகள் துவங்கின. இந்த வகையில் நாடு முழுவதும் சுமார் 4 கோடி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில், 4 கோடி குடும்ப அட்டைகள் நீக்கத்திற்கும், உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா, 94-ஆவது இடத்தைப் பெற்று, ‘தீவிரமான பட்டினி நிலவும் நாடுகள்’ பட்டியலுக்கு இந்தியா தள்ளப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மத்திய பாஜக அரசோ, இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வந்தது. 

முன்பொருமுறை இதுதொடர்பாகக் கூறும்போது, “மரணங்கள் பட்டினியினால் நேரவில்லை; வறுமை காரணமல்ல!” என்றுதெரிவித்தது. அதாவது 3 கோடி ரேஷன் கார்டுகளை நீக்கி விட்டதால் குடும்பங்கள் வறுமையில் மரணமடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்றுகூறியது.ஆனால், கொய்லி தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில், “3 கோடி ரேசன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்ததால் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருந்தால், அதுமிகவும் தீவிரமான விவகாரம்” என்று உச்சநீதிமன்றம் அண்மையில் குறிப்பிட்டுள்ளது.பாஜக ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், தனது 11 வயது மகள் சந்தோஷிகுமாரியை பட்டினிச் சாவுக்கு பலி கொடுத்தவர்தான் கொய்லி தேவி. தலித் தாயானஇவரது குடும்ப அட்டை ஆதாருடன்இணைக்கப்படவில்லை என்பதற்காக ரத்துசெய்யப்பட்டது. 6 மாதங்களாக ரேசன்கிடைக்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட கணவனையும், குழந்தைகளை வைத்துக்கொண்டு வறுமையோடு போராடிய கொய்லி தேவியால் ஒரு வேளை உணவைக் கூட உத்தரவாதம் செய்ய முடியவில்லை. இதில் 8 நாள் பட்டினியாககிடந்த 11 வயது குழந்தை சந்தோஷி குமாரி இறந்தே போனார். மாநிலஅரசோ மலேரியாவால் குழந்தை இறந்ததாக கணக்கு காட்டியது. இவ்வாறு தனது குடும்பத்தில் ஒருவரை பலிகொடுத்த வேதனையில்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

கொய்லி தேவி-யின் வழக்கறிஞர் கொன்சால்வேஸ் ஆங்கில நாளேட்டிற்கு இதுதொடர்பாக அளித்த பேட்டியில், “உணவுக்கான உரிமை என்பதை குறியீடாக உணர்த்தும் குடும்ப அட்டைகளை ஆதார் இல்லை என்பதற்காக நீக்க முடியாது, ரத்துசெய்ய முடியாது; ஆனால், 2 கோடி முதல் 4கோடி வரையிலான குடும்ப அட்டைகள் பயனாளர்களுக்கு முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்பாமல் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “அரசு தொடர்ந்து ஆதாரை வலியுறுத்துவது துரதிர்ஷ்டமே. சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுவதற்காக ஆதார் அட்டையை வலியுறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. பழங்குடி மக்கள்ஒன்று ஆதார் வைத்திருக்க மாட்டார்கள்,அல்லது பழங்குடி மற்றும் ஊரகப்பகுதிகளில் தனித்துவ அடையாள அமைப்பு வேலை செய்யாமல் இருந்திருக்கும். ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமலேயே ஆதார் அட்டை இல்லைஎன்று கூறி 4 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.கொய்லி தேவியின் வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “4 கோடி குடும்ப அட்டைகளும் ரத்தாகி விட்டனவா?” எறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதில் அளித்த வழக்கறிஞர்கொன்சால்வேஸ், “ஆமாம்! பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன. 3 கோடி குடும்ப அட்டைகளும் தொலைத்துக் கட்டப்பட்டு விட்டன. இந்திய ஒன்றிய அரசின் அறிவிப்பை நான்காட்ட முடியும். இந்த அறிவிப்பு நம் பிரதமருடையது” என்றார்.

“மாநிலங்கள் இந்த மரணங்களை மூடிமறைத்து வயிற்றுப்போக்கு, மலேரியா என்று கூறுகின்றன. ஆனால் உண்மை என்னவெனில் உணவின்மைதான் மரணத்துக்குக் காரணம். ஆதார், பயோமெட்ரிக் போன்ற கொடூரமான நடைமுறைகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளகோடிக்கணக்கான இந்தியர்கள் ஒன்றும்இல்லாதவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா,கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டினிச்சாவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது” என்றும்கொன்சால்வேஸ் தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த அரசு தரப்புகூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமான் லேக்கி, “இந்தப் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டியதில்லை. குடும்ப அட்டை வழங்குவதற்கு ஆதார் தேவை இல்லை. மேலும் குடும்பஅட்டை வழங்குவது மாநில அரசுகளிடம்தான் பொறுப்பு உள்ளது. ஆகவே மனுதாரர் குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தைத் தான் நாடியிருக்க வேண்டும். தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறைதீர்ப்பு மையத்திடம் இதைக் கொண்டு சென்றிருக்க வேண்டும், உச்ச நீதிமன்றத் துக்கு வந்திருக்கக் கூடாது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நாங்கள் இந்த வழக்கை பரிசீலிக்க தலைப்படுகிறோம். ஏனெனில் மனுதாரர் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன, ரத்துசெய்யப்பட்டுள்ளன என்று புகார் வைத்துள்ளார். இது மிகவும் தீவிரமான விவகாரம்” என்றதுடன், உணவுப்பாதுகாப்புச் சட்ட குறைதீர்ப்பு அமைப்பை நாட முடியாததற்கு, ஒரு மாநிலம் கூட அதற்கென தனித்தஅதிகாரிகளை நியமிக்கவில்லை என்கிறார் மனுதாரர். அனைத்து மாநிலங் களுமே ஏற்கெனவே இருக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கியுள்ளனரே தவிர தனியாக நியமிக்கவில்லை என்கிறார். கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகளும் உணவு விநியோக முறையில் பெரிய ஊழல்வாதிகளாக இருக்கின்றனர் என்று மனுதாரர் குற்றம் சாட்டுகிறார். உணவுக்கான உரிமை விழிப்புணர்வின் பட்டினிக் கண்காணிப்பு அறிக்கையில் இந்தியாவில் பட்டினி நிலவரம் மோசமாக உள்ளது என்றும் உலகபட்டினிக் குறியீடு, 2020-ன் படி 107 நாடுகளில் இந்தியா 94-ஆம் இடத்தில் ‘தீவிர பட்டினிப் பிரிவு நாடுகள்’ பட்டியலில் உள்ளதும் முக்கியமானது.

இந்நிலையில், போலி குடும்ப அட்டைகள் என்ற பெயரில், 4 கோடி குடும்ப அட்டைகளை நீக்கம் செய்ததே, தற்போதைய ‘பட்டினி சாவுகளுக்குக் காரணம்’ என்ற குற்றச்சாட்டாக மாறியிருக்கிறது. ‘எனவே, 4 கோடி ரேசன் அட்டை
கள் ரத்து காரணமாகவே பட்டினிச் சாவுகள் ஏற்பட்டிருந்தால் அது மிகவும் சீரியஸான விவகாரம்’ என்பதால் இதுதொடர்பாகபதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

;