சென்னை:
உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஓய்வுபெறுவதற்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதிவேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. போலி பத்திரிகையாளர்களை களைய தமிழ்நாடு பிரஸ்கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ்உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலுக்கு மட்டும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றஉத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.