புதுதில்லி,ஜனவரி.21- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் பெற்ற தண்டனை விபரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில். குற்றவாளிகளின் தண்டனை விவரங்களின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் நீதிபதி பி.எம்.திரிவேதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளனர்.