court

img

தெரு நாய்கள் வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு!

தெரு நாய்களை காப்பகங்களின் அடைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது
தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு நாய்களை பிடிக்க இடைக்கால தடை விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 
மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம், அரசின் செயலற்ற தன்மையால் இந்நிலை உருவாகியுள்ளது, தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளன, ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.