1ம் பக்கத் தொடர்ச்சி....
சேதம் விளைவிக்காதவரை அமைதியான முறையில் நடத்தும் போராட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உண்டு. விவசாயிகள் சரியான முறையில்தான் போராட்டம் நடத்துகிறார்கள். அதை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தாலும் அதன் அர்த்தம் இல்லாமல் போகும். மத்திய அ ரசும், விவசாயிகளும் பேச்சு நடத்த வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் போராட்டத்தை சிறிது மாற்றியமைக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கேட்போம்.வேளாண் சட்டங்களில் உள்ளபிரச்சனைகளைத் தீர்க்க விவசாயிகள், அரசின் பிரதிநிதிகள் கொண்ட சார்பற்ற, சுயாட்சித்தன்மை கொண்ட குழுவை அமைத்து தீர்வு காணலாம் என நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் அமைக்கும் குழு, இதற்கான தீர்வுகளை வழங்கும். அதை பின்பற்றலாம். அதுவரை போராட்டம் நடக்கலாம். ஆனால் மக்களின் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது.
பி.சாய்நாத்
இந்தகுழுவில் பி.சாய்நாத், பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள் என ஆலோசனை தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.அப்போது அட்டர்னி ஜெனரல்கே.சி. வேணுகோபால் வாதிடுகையில் “போராட்டம் நடத்தும் விவசாயிகள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. மிகப்பெரிய அளவில் கூட்டமாக அமர்கிறார்கள். கொரோனாகுறித்த அச்சம் இருக்கிறது. போராடும் விவசாயிகள் கிராமங் களுக்கும் சென்றால் அங்கு பரவவாய்ப்புள்ளது. மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை விவசாயிகள் மீற முடியாது”எனத் தெரிவித்தார்.முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விவசாயிகளுக்காக வாதாடினார். அப்போது அவர், “உண்மையில் விவசாயிகள் சட்டங்கள் மீதான திருத்தங்கள் குறித்து விவாதித்திட நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டம் தங்களுக்கு எதிரானது என்று பெரும்பான்மை மக்கள் கருதும்போது, பெருமளவில் கிளர்ச்சிகள் நடைபெறும். வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் நடந்தது என்ன என்று நினைத்துப் பாருங்கள். பாரிசில், விவசாயிகள் சாலைகளை மறித்தனர். விவசாயிகள் தில்லிக்கு அணிவகுத்து வந்தனர். யார் அவர்களைத் தடுத்து நிறுத்தியது? காவல்துறையினர்தான் அவர்களைத் தடுத்தனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் வாதிட்டார்.அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில் “தில்லி செல்லும் வழியை விவசாயிகள் தடுத்தால் மக்கள் வேகமாகச் செல்லவே முயல்வார்கள். விவசாயிகளின் நோக்கம் என்பது போராட்டம்நடத்துவதோடு மட்டுமல்லாமல், பேச்சு வார்த்தை நடத்தினால்தான் நிறைவேறும். போராட்டம் மட்டும் நடத்தினால் உதவாது.
விவசாயிகள் வேதனையை அறிகிறோம்
நாங்களும் இந்தியர்கள்தான். விவசாயிகள் வேதனையை அறிகிறோம், அவர்களுக்காக வேதனைப்படுகிறோம். விவசாயிகளின் போராட்டம் செல்லும் பாதையை மட்டுமே மாற்ற வேண்டும். விவசாயிகள் அவர்களுக்காக நீதிகோரிவாதிடலாம் எனஉறுதியளிக் கிறோம், இதற்காக நாங்கள் குழுவையும் அமைக்க இருக்கிறோம்.குளிர்கால விடுமுறையில் நீதிமன்றம் செல்ல இருப்பதால், இந்த வழக்கு குளிர்கால விடுமுறை நீதிமன்றத்திடம் செல்லும் என்பதை தெரிவிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி தெரியப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
நிறுத்தி வைக்க முடியுமா?
அப்போது அட்டர்னி ஜெனரலிடம் பேசிய தலைமை நீதிபதி பாப்டே, “இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, வேளாண் சட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்திவைக்க முடியுமா. இந்த வழக்குமுடியும்வரை சட்டத்தை அமல்படுத்த எந்தநிர்வாக ரீதியான நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என மத்தியஅரசு உறுதியளிக்க முடியுமா” எனக் கேட்டார்.அதற்கு அட்டர்னி ஜெனரல் “மத்திய அரசிடம் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைக்கும் குழு வேளாண்சட்டத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் தீவிரமாக ஆலோசி்த்து விவாதிக்கட்டும். அவர்களால் அந்த சட்டத்தை நீக்குங்கள் எனச் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.இதைக் கேட்ட நீதிபதி பாப்டே, “இதற்கான முடிவை அந்த குழுவிடம் விட்டுவிடுங்கள். அவர்கள் எடுக்கட்டும்” எனத் தெரிவித்தார்.