புதுதில்லி:
தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழகஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்றுமத்திய அரசு உறுதி யளித்தது. இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டு, விசார ணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உச்சநீதிமன்றம் அளித்தஒரு வார கால அவகாசம் கடந்த வெள்ளிக் கிழமையுடன் முடிந்தது. தற்போது வரை ஆளுநர் எந்தவித முடிவும் மேற்கொள்ளாமல் உள்ளார். இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்குபிப்ரவரி 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வரும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.