court

img

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு!

சென்னை,செப்.27- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் ராஜேந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் ராஜேந்திரனை கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில், ஆர்.மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.
 ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பதவியேற்பு விழா சென்னையில் உள்ள ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.