சென்னை,பிப்.25- தற்காலிக அரசுப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கத் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.