தில்லி:
3 வருடங்களுக்கு முன்பு நாட்டின் முக்கிய புகார் தளமாக சமூக வலைத்தளத்தில் வலம் வந்த #மீடூஇந்தியா (#metoo) என்ற ஹேஸ்டேக்கில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் புகார் அளித்து குற்றம்சாட்டினர்.
இதே முறையில் பிரபல பெண் பத்திரிகையாளரான பிரியா ரமணி மோடியின் நெருங்கிய நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறினார். இவர் மீது குற்றம்சாட்டும் பொழுது எம்.ஜே.அக்பர் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார்.
பிரியா ரமணி புகாரளித்த அடுத்த சில நாட்களில் அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, பிரியா ரமணி மீது தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கில் இருந்து பிரியா ரமணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்புக்கு பெண்ணிய வாதிகள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.