court

img

கண்மாய் மற்றும் ஓடையை ஆக்கிரமித்து சாலை அமைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.... கனரக வாகனங்களை இயக்கவும் தடை...  

மதுரை:
அருப்புக்கோட்டை அருகே பன்னிக் குண்டு கிராமத்தில் அரசு விதிமுறைகளை மீறி அரசு அதிகாரிகளின் ஆசியுடன், விஷ்ணுசூர்யா நிறுவனம் கண்மாய் மற்றும் அதன் நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்து சாலைஅமைத்து வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கண்மாய், மற்றும்ஓடை ஆக்கிரமிப்பிற்கு இடைக்கால தடைவிதித்தும், ஓடை மற்றும் கண்மாய் கரைகளில் கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள தென்பாலை கிராமத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் விஷ்ணுசூர்யா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் கல்குவாரியை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் அதானி குழுமம் உள்ளிட்ட மிக பெரியகார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கனரக வாகனங்கள் புலியூரான், செம் பட்டி வழியாக மாநில நெடுஞ்சாலையை அடையும் வகையிலேயே அரசு அனுமதிவழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந் நிறுவனம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அப்பகுதியில் இருக்கும் புங்கன்குளம், பன்னிக்குண்டு, மேலக்கண்டமங்கலம் காண்மாய்களையும், நீர்வழிப்பாதைகளையும் ஆக்கிரமித்து பயன்படுத்திவந்தது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சட்ட உரிமைநீதி பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறுதரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்துஅதிகாரிகளின் மறைமுக ஆசியுடன் விஷ்ணு சூர்யா நிறுவனம் நீர் நிலைகளைஆக்கிரமிப்பு செய்து வந்தன. ஏற்கனவே இது குறித்து தீக்கதிர் நாளிதழ் நவம்பர் 4 அன்று விரிவான செய்தி வெளியிட்டிருந் தது. ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் தீக்கதிர் எண்ம பதிப்பின் பொறுப்பாசிரியர் எம். கண்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கியஅமர்வு டிசம்பர் 14 அன்று விசாரித்தனர்.எம்.கண்ணன் சார்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, விஷ்ணுசூர்யா நிறுவனம் பன்னிக்குண்டு கண்மாயில் 0.62.37 ஏர்ஸ் பரப்பளவில் ஆக்கிரமித்து சாலை அமைத்திருக்கிறது. இதனை அரசின் ஆய்வு உறுதிப் படுத்தியிருக்கிறது. அதனை அகற்ற 24.06.19 அன்று கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோன்று 18.09.20 ஒன்பது கிராம மக்கள்பங்கேற்ற சமாதான கூட்டத்தில் புங்கன்குளம், பன்னிக்குண்டு மற்றும் மேலக்கண்டமங்கலம் கிராம கண்மாய் வழியாக ஆக்கிரமிப்பு செய்து பாதையாக பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. நிறுவனத் திற்கு அனுமதி அளிக்கப்பட்ட செம்பட்டி கிராமம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையினை பயன்படுத்திக் கொள்ளலாம். செம்படி கிராம மக்கள் ஆட்சேபணை தெரிவித்தால் மேற்படி கிராம மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்திருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் நிராகரித்துவிட்டு, தன்னிச்சையாக அரசு விதிமுறைகளுக்கு மாறாக விஷ்ணு சூர்யா நிறுவனம்; நீர்வரத்து ஓடையை மேவி, அதன்வழியாக, கண்மாய் மற்றும் கண்மாய் கரைமீது கனரக வாகனங்களை இயக்க அனுமதி அளித்துள்ளார். இது சட்டவிரோதமானது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. கோட்டாட்சியரின் வழங்கியிருக்கும் அனுமதியை ரத்து செய்தும், கனரகவாகனங்கள் இயக்கவும், சாலை அமைப்பதற்கும் தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள் அமர்வு,கண்மாய் பகுதியிலோ, கரைவழியாகவோ, நீர்வரத்து ஓடைகள் வழியாகவோ கனரக வாகனங்கள் சென்று வர விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டும்எனவும், மேலும் விஷ்ணுசூர்யா நிறுவனம் பன்னிக்குண்டு கண்மாய் மற்றும் ஓடை,கரை பகுதிகளில் எந்த வித சாலைகளையும் அமைக்க கூடாது எனவும் இடைக்காலதடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டனர்.இந்த தகவலறிந்த புலியூரான், கோணப்பணயேந்தல், பன்னிக்குண்டு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீதிமன்றத்தின் சரியான தலையீட்டிற்கு நன்றி தெரிவித்தனர்.

;