புதுதில்லி, அக். 5 - ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மீதான ஒன்றிய பாஜக அரசின் அடக்கு முறைக்கு, இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந் துள்ள நிலையில், இந்தியா முழு வதும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் 18 அமைப்புகளும் தங்களின் கண்ட னத்தை தெரிவித்துள்ளன. மேலும், இந்திய தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு கூட்டாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளன. அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப் பிட்டிருப்பதாவது:
பழிவாங்கல் அச்சுறுத்தலுக்கு இடையே பணி
சில கடினமான உண்மைகளை மக்களிடம் முன்வைப்பதற்காக, (ஆட்சியாளர்களால்) எப்போது பழிவாங்கப்படுவோம் என்ற அச்சு றுத்தலோடே இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களில் பெரும் பாலானோர் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த கடிதத்தை உங்களுக்கு அனுப்புவதன் நோக்கம், சட்டத்தால் நிறுவப்பட்ட செயல்முறை மற்றும் நடைமுறையைத் தவிர்ப்பது அல் லது தடுப்பதற்காக அல்ல. மாறாக, விசாரணை என்ற பெயரில் ஊடக வியலாளர்களை வரவழைத்து, அவர்களின் சாதனங்களை பறிமுதல் செய்ததில், அந்தச் செயல்பாட்டில் உள்ளார்ந்த துஷ்பிரயோகம் உள்ளது, என்பதை சுட்டிக்காட்டவே ஆகும்.
செய்தி வெளியிட்டதற்காகவே நடவடிக்கை
‘நியூஸ் கிளிக்’ வழக்கில் நாம் பார்ப்பது என்னவென்றால், குற் றங்கள் மற்றும் விசாரணைக்கான காரணங்கள் பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, (தில்லியில் நடந்த) விவசாயிகள் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், கொரோனா தொற்றுநோய் போன்ற வற்றை அரசாங்கம் கையாண்டது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி களே கைது நடவடிக்கைக்கான அடிப்படையாக மாறியுள்ளது.
அரசாங்கம் விரும்பாததை கூறக் கூடாதா?
பத்திரிகையாளர்கள் சட்டத் திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. அவ்வாறு இருக்கவும் நாங்கள் விரும்ப வில்லை. இருப்பினும், ஊடகங்கள் மீதான மிரட்டல் சமூகத்தின் ஜன நாயக கட்டமைப்பை பாதிக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச விவகாரங் களில் வெளியிடப்படும் செய்தியை அரசாங்கம் ஏற்காததாலேயே, ஊடக வியலாளர்களை ஒரு குற்றவியல் செயல்முறைக்கு உட்படுத்துவது, பழிவாங்குவது அச்சுறுத்துவது, பத்திரிகைகளை அடங்கிப்போகச் செய்யும் முயற்சியாகும். இது பத்தி ரிகை சுதந்திரத்திற்கு எதிரானதா கும்.
பரந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது
நேர்மையாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படை யில், அரசாங்கத்தின் விசாரணை முக மைகளுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த அதிகா ரங்கள், அரசியலமைப்பு வழங்கி யுள்ள பேச்சுரிமைக்கு எதிரானதாக இருக்க முடியாது. ஆனால், அரசிய லமைப்பு விதிமுறைகளை மீறி விசா ரணை அமைப்புக்களின் தவறான நட வடிக்கைகளால், பத்திரிகையா ளர்கள், ஜாமீனே இல்லாமல் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிக்கும் நிலை ஏற்படுகிறது. சித்திக் கப்பான், ஸ்டான் சுவாமிக்கு என்ன நேர்ந்தது? சித்திக் கப்பன் வழக்கு இதற்கு உதாரணம் ஆகும். ஜாமீன் பெறு வதற்குள், இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்களை அவர் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, ‘பயங்கரவாதத்தை’ எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற போர் வையில், மனித வாழ்வின் மீது அதி காரிகள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு, காவ லில் இருந்த தந்தை ஸ்டான் சுவாமி யின் துயர மரணம் முக்கியமான சாட்சியாகும். இவ்வாறு ஊடகங்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக போய்க்கொண்டி ருக்கின்றன. இதே திசையில் அவர் களை மேலும் செல்ல அனுமதித்தோ மேயானால், பின்னர் அந்த தவறு களை சரிசெய்வதற்கு நீண்டகால மாகலாம் என்பதே எங்களின் அச் சம். எனவே, ஊடகங்களுக்கு எதி ரான புலனாய்வு அமைப்புகளின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீதித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என்பதே எங்க ளின் கூட்டுக் கருத்தாகும்.