cinema

img

சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.... நடிகர் விஜய் சேதுபதி பேட்டி....

சென்னை:
அனைத்து தேர்தல்களிலும் சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

 பொதுமக்கள். அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்டோர்  அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.இதில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அங்கு கூடிய  ரசிகர்களுடன்  செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் பின்னர்  செய்தியாளர்களிடம் விஜய் சேதுபதி கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளன. மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே அனைத்து தேர்தல்களிலும் தனது நிலைபாடு என்று தெரிவித்தார்.

;