cinema

img

நடிகர் அஜித்தின் வைரலாகும் புகைப்படங்கள் 

நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் நடிகர் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமது நீண்ட நாள் திட்டமான பைக் பயணத்தை அஜித் தொடங்கியுள்ளார். 

முன்னதாக பைக் பயணத்தில் நல்ல அனுபவம் கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணை அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசித்தார். இதையடுத்து வடஇந்தியவில் பைக் பயணத்தைத் தொடங்கிய அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் அஜித் நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

;