cinema

img

3 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம் டிரெய்லர்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெய் பீம்’ படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெய் பீம்’ . பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்துப் பேசும் இப்படத்தை, கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின், டிரெய்லர் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.  

ஏற்கனவே, கடந்த வாரம் வெளியான ‘ஜெய் பீம்’ டீசர் இதுவரை வெளியான சூர்யா பட டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் கடந்த டீசர் என்று  புதிய சாதனை செய்தது. அதோடு, யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது. தற்போது, 15 மில்லியன் பார்வைகளுக்குமேல் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் 10 வது இடத்தில் உள்ளது. இதனால், ‘ஜெய் பீம்’ டிரெய்லருக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

;