cinema

img

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை, பிப்.03-
டாக்டர் திரைப்படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். 
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

;