cinema

img

திரைக்கதிர் - சோழ. நாகராஜன்

2022ஆம் ஆண்டு நிறைவுறுகிறது. இந்த ஆண்டு முழுவதும் தமிழில் திரையரங்குகளில் வெளியான படங்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 200. ஓடிடி-யில் வெளியானவை 27 படங்கள். இவற்றில் 10 முதல் 15 படங்கள்தான் வசூலைத் தந்த வெற்றிப்படங்கள் என்கிறார்கள். அப்படியென்றால் ஆகப் பெரும்பாலான முயற்சிகளும் விழலுக்கு இறைத்ததாகிவிட்டதுதான் மிச்சம் போலும். இந்த 200 படங்களில் பாதிக்கு மேலான படங்களை எங்கு தேடினாலும் கிடைக்காதாம். அவற்றின் முன்னோட்டம்கூட யூ டியூபிலோ அல்லது வேறு எங்குமோ கிட்டவே கிட்டாதாம். டிஜிட்டல் சினிமா என்றானபின் வெளிவரும் படங்களில் பெரும்பாலானவை ஒரேயொரு நாள்கூட திரையரங்குகளில் தாக்குப்பிடித்து நிற்பதில்லை என்கிறார்கள். அப்புறம் பெட்டிப் பாம்புகள்தானாம்.  மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கமலின் விக்ரம், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சிவகார்த்திகேயனின் டான், தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார், விருமன், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, விஜய்சேதுபதியின் காத்துவாக்கில ரெண்டு காதல் ஆகிய 10 படங்கள்தான் வசூலில் சாதனை படைத்த தமிழ் சினிமாக்களாம்.