தமிழ்த் திரைப்படத்தை இன்னொரு கட்டத்திற்குத் தரமுயர்த்தியவர் இயக்குநர் பாரதிராஜா. தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். குறிப்பாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவரது நடிப்பு குறிப்பிட்டுப் பேசப் பட்டது. தற்போது நித்திலன், நிர்மல்குமார் போன்றவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவர் இயக்குநர் பாரதிராஜாவாக மீண்டும் அவதாரம் எடுக்க இருக்கிறார் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது. ஆமாம், தேனியைப் பின்னணியாகக் கொண்டு, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்றை இயக்கி, நடிக்க இருக்கிறார் அவர். அதற்குப் பெயரும் தயாராம். தாய்மெய் என்பதே அதன் பெயர் என்கிறார்கள் திரை வட்டாரத்தில். முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.