cinema

img

பிப்ரவரி 3ல் வெளியாகிறது "பொம்மை நாயகி" திரைப்படம்

நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் உறுவாகியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி.

’மண்டேலா’ படத்தை அடுத்து யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தி இசையமைத்தும் உள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.