cinema

img

கிருத்திகா உதயநிதி இயக்கும் 3வது படம்...

நடிகரும், திமுக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் ஆன்டணி நடிப்பில் காளி படத்தை இயக்கியிருந்தார். இப்போது கிருத்திகா உதயநிதி  தனது 3 வது படத்தினை இயக்கத் தயாராகிவருகிறார். காளிதாஸ் ஜெயராமன் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவினை ரிச்சர்ட் எம். நாதன் மேற்கொள்ள உள்ளார். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தபின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

;