அமெரிக்காவின் ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள் தங்களின் சம்பள உயர்வு மற்றும் சரியான பணிச் சூழல் வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ரைட்டர்ஸ் கில்டு ஆப் அமெரிக்கா (டபிள்யூ.ஜி.ஏ.) அமைப்பு இந்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. இதனிடையே ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு (எஸ்.ஏ.ஜி.) எனும் நடிகர்களுக்கான அமைப்பும் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதாம். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு பெரும் போராட்டம் ஹாலிவுட்டில் நடப்பதாகக் கூறப்படுகிறது.