business

img

அமேசானில் ஒரு பக்கெட்டின் விலை வெறும் 25,999 மட்டும் தானாம்! 

அமேசானில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை வெறும் 25,999 க்கு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இணைய வர்த்தக நிறுவனமாக அமேசானில் பல ஆடம்பர பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம் தான். ஆனால் தற்போது ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்பட்ட ரூ.35,900 லிருந்து 28 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு வெறும் 25,999க்கு விற்பனை செய்யப்படுவதாக அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 
இதுகுறித்து விவேக் ராஜூ என்பவர் இதைப்பார்த்ததும் என்ன செய்வது என்ற தெரியவில்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் எதையும் கண்டு கொண்டாத அமேசான் நிறுவனம் இந்த பக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது. 
 

;