சென்னை:
பெட்ரோல்,டீசல் விலையுயர்வால் மக்களும் வாகன ஓட்டிகளும் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.மக்கள் மீது ஒன்றிய மோடி அரசின் விலையுயர்வு தாக்குதல் தொடர்கிறது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி,மக்களை அவதிக்குள்ளாக்கி வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப்பொருட் களின் விலையும் உயர்கிறது. இந்நிலையில் ஒன்றிய மோடி அரசின் அடுத்த தாக்குதலாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50-ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்த்தப்பட்டுள்ள தாகவும், இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.84.50 காசுகள் அதிகரித்து, ரூ.1,687.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.இதனால் ஒன்றிய அரசின் அடுத்த தாக்குதல் என்னவாக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.