புதுதில்லி:
பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை மத்திய பாஜகஅரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.மே மாதத்தில் மட்டும் 14 முறை பெட் ரோல், டீசல் விலையை உயர்த்திய மோடி அரசு, சனிக்கிழமையன்று 15-ஆவது முறையாக- பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 முதல் 26 காசுகள் வரையும், டீசல் விலையை லிட்டருக்கு 28 காசுகள் முதல் 30 காசுகள் வரையும் உயர்த்தியுள்ளது.
2021 மார்ச்சில் அசாம், கேரளம், மேற்குவங்கம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 2 மாதங்களுக்கு பெட்ரோல் - டீசல்விலையை மாற்றாத மோடி அரசு, ஓரிருமுறை விலைக் குறைப்பும்கூட செய்தது. ஆனால், மே 2-இல் தேர்தல் முடிவுகள் வெளியானது முதற்கொண்டு, பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தத்துவங்கிய மோடி அரசு, மே 29-ஆம் தேதி15 ஆவது முறையாக பெட்ரோல் - டீசல்விலைகளை உயர்த்தியது.இதன் காரணமாக, சனிக்கிழமை
யன்று மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 04 காசுகளாகவும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 100 ரூபாய்19 காசுகளாகவும் உயர்ந்தது. இந்தியாவிலேயே பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்த முதல் மெட்ரோ நகரம் என்ற பெயரை மும்பை பெற்றது.
இதேபோல ஹைதராபாத்தில் 97 ரூபாய் 63 காசுகள், பெங்களூருவில் 97 ரூபாய் 07 காசுகள், பீகார் தலைநகர் பாட்னாவில் 96 ரூபாய் 10 காசுகள்சென்னையில் 95 ரூபாய் 51 காசுகள், கொல்கத்தாவில் 93 ரூபாய் 97 காசுகள்,தில்லியில் 93 ரூபாய் 94 காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.டீசல் விலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக போபாலில் 93 ரூபாய் 37 காசுகளாகவும், ஹைதராபாத்தில் 92 ரூபாய் 54 காசுகளாகவும், பாட்னாவில் 90 ரூபாய் 14 காசுகளாகவும் உயர்ந் துள்ளது.