business

img

செஸ் மற்றும் இறக்குமதி வரியை அதிகரித்த பட்ஜெட்.... சமையல் எண்ணெய், துணிமணிகள் எலக்ட்ரானிக்ஸ் விலைகள் உயரலாம்....

புதுதில்லி:
பெட்ரோல் மீது 2 ரூபாய் 50காசுகளும், டீசல் மீது 4 ரூபாயும், ‘செஸ்’ வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை, ஏற்கெனவே உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இந்தபுதிய அறிவிப்பு விலைவாசியை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஆடம்பரப் பொருளாக பார்க்கப்படும் தங்கம் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் குறைத்துள்ள மோடி அரசு,அத்தியாவசியப் பொருளான சமையல் எண்ணெய் உள்ளிட்ட
வற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.

இதனால், இறக்குமதி செய்யப்படும் துணிகள், இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல்சார்ஜர், லெதர் ஷூ, ஆட்டோ மொபைல் பொருட்கள் ஆகிய
வற்றின் விலைகள் உயரும் என்று வர்த்தகர்கள் கூறுகின் றனர்.மது பானத்திற்கு 100 சதவிகிம் செஸ் (Cess) வரி விதிக்கப் படும் என்று பட்ஜெட்டில் அறிவித்து இருந்தாலும், ஆல் கஹால் பானங்களின் விலைஅதிகரிக்காது என்று நிபுணர் கள் தெரிவிக்கின்றனர். அதாவது, 100 சதவிகிதம் செஸ் வரிவிதித்த மோடி அரசு, மறுபுறத் தில் மதுபானங்கள் மீதான தனிப்பயன் வரியை 100 சதவிகிதம் குறைத்து விட்டது; இதனால்மதுப்பிரியர்களுக்கு பிரச்சனை என்று கூறியுள்ளனர்.