business

img

மோடி ஆட்சியில் பேருந்துகளை விற்க லஞ்சம் கொடுத்தோம்.... மத்திய அமைச்சர் கட்காரி சொகுசு பேருந்தையே லஞ்சமாக வாங்கிக்கொண்டார்..... ஸ்வீடன் நாட்டின் ஸ்கேனியா நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு.....

புதுதில்லி
இந்தியாவில் தங்களின் பேருந்துகள் மற்றும் டிரக்குகளை விற்பனை செய்வதற்கு, மத்திய ஆட்சியில் இருப்பவர் களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தஸ்கேனியா (Scania) நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் கட்காரி, தனது மகளின் திருமணத்தைச் சொல்லி, சொகுசுப் பேருந்து ஒன்றையேபரிசாக வாங்கிக் கொண்டார் என்றும்அந்த நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்கேனியா (Scania) நிறுவனம், சர்வதேச அளவில் கனரக லாரிகள் மற்றும்சொகுசுப் பேருந்துகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஆகும்.கனரக வாகனங்கள், கடல் மற்றும் பொதுதொழிற்துறை பயன்பாடுகளுக்கான டீசல் இயந்திரத் தயாரிப்பிலும் ஈடுபட்டுவரும் இந்நிறுவனம் ஸ்வீடன், பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து, சீனா, இந் தியா, அர்ஜெண்டினா, பிரேசில், போலந்து,ரஷ்யா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை வைத்திருக்கிறது.

உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் (VolkswagenGroup) குழுமத்தைச் சேர்ந்தது. இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் செய்தி ஊடகமான எஸ்.வி.டி. ஜெர்மனி நாட்டு ஊடகமான ஜிடிஎப் (ZDF) ஆகிய ஊடகங்கள் அண்மையில், ஸ்கேனியா நிறுவனம் தொடர்பாக புலனாய்வு செய்திகளை வெளியிட்டிருந்தன.இதில், ஜெர்மன் நாட்டின் ஜிடிஎப் (ZDF) செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ஸ்கேனியா நிறுவனம் இந்தியாவின் 7 மாநிலங்களில் தங்களது பேருந்துகளை விற்பனை செய்வதற்காக மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு, 65 ஆயிரம் யூரோ லஞ்சம் வழங்கிஉள்ளது” என்று கூறியிருந்தது.

ஸ்வீடன் நாட்டின் எஸ்.வி.டி செய்தி நிறுவனம், ஒருபடி மேலே சென்று, இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரியின் பெயரையே பகிரங்கமாக குறிப்பிட்டு, “நிதின் கட்காரியின் மகள்திருமணத்துக்கு ‘ஸ்கேனியா நிறுவனம்’ சொகுசுப் பேருந்து ஒன்றைப் பரிசாக அளித்து உள்ளது” என்று பரபரப்பைக் கிளப்பியிருந்தது.சர்வதேச செய்தி அமைப்பான ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters), இதனை மேற்கோள்காட்டி ‘ஸ்கேனியா’ நிறுவனஅதிகாரிகளிடமே நேரடியாக பேட்டி கண்டநிலையில், தாங்கள் லஞ்சம் கொடுத் ததை ‘ஸ்கேனியா’ அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.குறிப்பாக, ஸ்கேனியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரிச் ஹென்ரிட்சென் மற்றும் புதிதாக செயல்தலைவர் பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டியன் லெவின் ஆகியோர் லஞ்ச முறைகேடுகள் அரங்கேறியது உண்மைதான் என்றுதெரிவித்துள்ளனர்.“இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின்சொகுசுப் பேருந்துகள் மற்றும் டிரக்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு லஞ்சம் கொடு்க்க வேண்டி இருந்தது. இதேபோலஇந்தியாவின் 7 முக்கிய மாநிலங்களில் எங்கள் பேருந்துகளை விற்பதற்கு லஞ்சம்கொடுக்க வேண்டி இருந்தது. 

இந்தியாவிலுள்ள ஒரு சுரங்க நிறுவனத்திடம், சுமார் 86 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் பெறுவதற்காக எங்கள்பேருந்தின் சேசிஸ், என்ஜின் எண் உள்ளிட்டவைகளை போலியாக மாற்றி விற்பனை செய்த நிகழ்ச்சியும் அரங்கேறியது.இந்தியாவின் முக்கிய அமைச்சர் ஒருவர், 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தனது மகளின் திருமணத்திற்காக, தனதுமகனுடைய நிறுவனத்தின் பெயரில் ‘ஸ்கேனியா’ சொகுசுப் பேருந்து ஒன்றை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டார். இந்த பேருந்து இப்போது எங்கு உள்ளது,யார் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

2017-ஆம் ஆண்டில் ‘ஸ்கேனியா’ நிறுவனத்தின் இந்தியக் கிளை ஊழியர்களின் செயல்பாடுகளை தணிக்கைசெய்தபோதுதான், பேருந்து, டிரக்விற்பனைக்காக, இந்திய ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரங்கள் எங்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, இந்தியக் கிளையின் சீனியர் மேனேஜர்கள் உட்பட அனைவரும் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டனர். எங்களால் போடப்பட்ட ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்தியச் சந்தையில் எங்கள் பேருந்துகளை விற்பதில்லைஎன்று முடிவெடுத்தோம். அதன்படி இந்தியாவிலிருந்த எங்கள் ஆலையையும் மூடிவிட்டோம்’ என்று ஸ்கேனியா அதிகாரிகள் கூறியுள்ளனர்.2007-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது சேவையை துவங்கிய ஸ்கேனியாநிறுவனம், 2011-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் அருகில் உள்ள தொழிற் பேட்டையில் தனது தொழிற்சாலையை அமைத்தது. 

அதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஒப்பந்தங்களை பெறுவதற்காக 2013 முதல் 2016-ஆம் ஆண்டுகளுக்கு இடையேதான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிமற்றும் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாயை இந்த நிறுவனம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இந்திய சுரங்க நிறுவனங்களுக்கு 11.8 மில்லியன் டாலர் மதிப்பிலான டிரக்குகளை ‘ஸ்கேனியா நிறுவனம்’ விற்றுலாபம் ஈட்டியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-வின் தலைமையிலான நாக்பூர் மாநகராட்சிக்கு இந்த நிறுவனம்எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளை தயாரித்து அளித்துள்ளது. இதனிடையே, ஸ்வீடன் ஊடக நிறுவனத்தின் செய்திக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ‘வெளிநாட்டு  செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியானது புனையப்பட்டது. எவ்வித ஆதாரமுமற்றது’ என்றுகூறியுள்ளது.

மறுபுறத்தில், ‘ஸ்கேனியா’ நிறுவனம் தொடர்பான லஞ்ச விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன. “பேருந்து ஒப்பந்த ஊழல்விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. இதில், மத்திய அரசு மீதும், சில மாநிலஅரசுகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தீவிர நீதிவிசாரணை வேண்டும்’’ என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் வலியுறுத்தியுள்ளார்.