2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த நிலையில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
வருமான வரியை, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யத் தவறினால், 5 லட்சத்தைத் தாண்டி வருமானம் உள்ளவர்களுக்கு, ரூ.5,000 வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு, பிரிவு 234F இன் கீழ் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.