பெங்களூரு:
கொரோனாவால் ஏற்பட் டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க மாநிலங்களுக்கு மத்தியஅரசு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்; ஆனால் ரூ.20 லட்சம் கோடிகொடுப்பதாக சொல்லும் மத் திய அரசு, மாநிலங்களை பிச்சைபாத்திரத்துடன் நிற்க வைத் துள்ளது என்று குமாரசாமி சாடியுள்ளார்.கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம்தலைவருமான குமாரசாமி இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:
நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் மூலம் பாஜகவுக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள் ளது. மற்றபடி நாட்டு மக்கள்
தன்னிறைவு அடைய வேண்டும்என்று கூறி மத்திய அரசு மக்களை அனாதையாக விட்டுள் ளது.ஊரடங்கால் தத்தளித்து கொண்டிருக்கும் விவசாயிகள், பொதுமக்களுக்கு உதவ மத்தியஅரசு எதையும் அறிவிக்கவில்லை. எங்களிடம் இருந்து உங்களுக்கு ஒரு பைசா காசு கூட கிடைக்காது என்பதை கூறியிருக்கிறது.தொழில் நிறுவனங்களை பாதுகாக்க மட்டுமே மத்தியஅரசு திட்டங்களை அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்புகள், கற்பனைகள் மூலம் ரூ.20 லட்சம்கோடி தொகுப்பு என்று கூறி காகித அரண்மனையை மத்தியஅரசு கட்டியுள்ளது.இவ்வாறு குமாரசாமி விமர்சித்துள்ளார்.