articles

img

வரலாறு படைத்திடும் விவசாயிகள் பேரெழுச்சி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு பாராட்டு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் 2021 ஆகஸ்ட்6 முதல் 8 தேதிகளில் நடைபெற்றது. பின்னர் மத்தியக்குழு திங்களன்று வெளியிட்டுள்ளஅறிக்கை வருமாறு:மத்தியக் குழு, (அ) கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் பரிசீலனை.(ஆ) அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து அறிக்கைமற்றும் தேசிய அளவிலான பிரச்சாரத்திற்கு அறைகூவல் (இ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவதுஅகில இந்திய மாநாட்டைக் கூட்டுதல் ஆகிய நிகழ்ச்சிநிரல்களை விவாதித்தது.

சட்டமன்றத் தேர்தல் பரிசீலனை
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கேரளா,தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக-விற்குப்பின்னடைவாக அமைந்தது. அஸ்ஸாமில், எதிர்க்கட்சிகளின் ‘மகாஜோட்’ கூட்டணியைவிட வெறும் 0.78 சதவீதவாக்குகளை கூடுதலாகப் பெற்று மிகக் குறைந்த கூடுதல் வாக்கு சதவீதத்துடன் பாஜக அணிஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே பணத்தை வாரி இறைத்தும், மதவெறித் தீயைக் விசிறிவிட்டும், மத்தியப் புலனாய்வு அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்தும்கூட; எதிர்க்கட்சிகளையும் அதன்தலைவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டிப் பணியவைக்க முயற்சித்தும்கூட; பாஜகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் அதனால் தாங்கள் கோரியவிதத்தில் மக்கள்ஆதரவைப் பெற முடியவில்லை. பாஜக அணி, தீர்மானகரமான முறையில் கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.     

கேரளம்:  கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிமகத்தான வெற்றி பெற்றிருப்பதற்கு மத்தியக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தையே மீண்டும் நம்பிக்கை வைத்துஅதனைத் தேர்ந்தெடுத்திருப்பதற்காக கேரள மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.கேரள இடதுஜனநாயக முன்னணியின் தேர்தல் முடிவுகள் முந்தையசட்டமன்றத் தேர்தல் முடிவைக் காட்டிலும் சிறந்ததாகும்.கேரள மக்கள், ஆட்சியிலிருந்த இடது ஜனநாயகமுன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்காகவும், அது பின்பற்றிய மாற்றுக் கொள்கைகளுக்காகவும்,  மாநிலம் எதிர்கொண்ட அனைத்து இயற்கைப் பேரிடர்களையும் சமாளித்த முறைக்காகவும்,  கொரோனா வைரஸ் தொற்றை மிகச் சிறந்த முறையில் சமாளித்ததற்காகவும், நலத்திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்காகவும், ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக தனது பண பலத்தை வாரி இறைத்த போதிலும்; மற்றும்பல்வேறுவிதமான தில்லுமுல்லுகளில் ஈடுபட்டபோதிலும் கடும் பின்னடைவையே எதிர்கொண்டது. மேற்கு வங்க மக்கள் மதவெறி சித்தாந்தத்தை மிகவும் தெளிவான முறையில் நிராகரித்திருக்கிறார்கள்.அதே வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு இந்த முடிவுகள் பெரும் அதிர்ச்சியைத் தரும் விதத்தில் அமைந்துவிட்டன. 1946க்குப் பின்னர் முதன்முறையாக சட்டமன்றத்திற்கு ஒரு கம்யூனிஸ்ட் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.இந்தத் தோல்வி தொடர்பாக மத்தியக் குழு மிகவும்ஆழமான முறையில் தன்னை சுய விமர்சன பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு படிப்பினைகளைப் பெற்று, மேற்கொள்ளப்பட வேண்டிய சரியான நடவடிக்கைகளை அடிக்கோடிட்டிருக்கிறது. மேற்கு வங்கமாநிலக்குழு இந்த சுயபரிசோதனையை விவாதித்து, அமல்படுத்திடும்.

தமிழ்நாடு: தமிகத்தில் வெற்றிபடைத்திட்ட திமுக தலைமையிலான கூட்டணியின் ஓர் அங்கமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

அஸ்ஸாம்: அஸ்ஸாமில் ‘மகாஜோட்’ கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டதில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோர்போக் தொகுதியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் வென்றிருக்கிறார். பத்தாண்டுஇடைவெளிக்குப் பின் அஸ்ஸாம் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவம் பெறுகிறது. இம்மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் முடிந்தபின்னர், கட்சி மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகளுக்காக, மாநிலக் குழுக்களுக்கு ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள்கோவிட் பெருந்தொற்றின் நிலைமை
கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பது தொடர்கிறது. மூன்றாவது அலையைத் தடுத்து நிறுத்தவேண்டுமானால், மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது, வெறுமனே 11.3 சதவீதம் பேர்தான்இரண்டு தவணை (doses) தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இரண்டு தடவைபோட்டுக்கொண்ட 11.3 சதவீதத்தினருடன் சேர்த்து மொத்தம் 40 சதவீதம் அளவிற்குத்தான் ஒரேயொருதடவை (single dose) தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த விகிதத்தில் நடவடிக்கைகள் தொடருமானால் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகக் கூட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை. மிகவும் மந்தமானமுறையில் தடுப்பூசிகள் போடப்படுவதற்குக் காரணம், தடுப்பூசிப் பற்றாக்குறைஏற்பட்டிருப்பதேயாகும். இலக்கினை எட்ட வேண்டுமானால் நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாக வேண்டும். ஒன்றிய அரசாங்கம்தடுப்பூசிகளை உலக அளவில் கொள்முதல் செய்து,தடுப்பூசி போடப்படுவதை விரைவுபடுத்திட வேண்டும்.

கோவிட் நிர்வாகக்கோளாறும், ஆழமான பொருளாதார மந்தமும்
ஒன்றிய அரசாங்கத்தின் நிர்வாகத்திறனின்மையும் அதன் கொள்கைகளால் பொருளாதாரம் பேரழிவுக்கு உள்ளாகியிருப்பதும் நம் மக்கள் மத்தியில் சொல்லொண்ணா வறுமை நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் கூர்மையாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பணவீக்கத்தின் விளைவாக மக்களின் வறுமை நிலை மிகவும் மோசமான அளவிற்குச்சென்றிருக்கிறது. வருமானம் ஈட்டுவது குறைவதுடன்வேலையின்மையும் சேர்ந்துகொண்டு ஒரு பக்கத்தில்தாக்கும் அதே சமயத்தில்; மறுபக்கத்தில் விண்ணைமுட்டும் விலைவாசி மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றது. பல குடும்பங்களைக் கடன் வலைக்குள் தள்ளியிருக்கிறது.இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது
இவற்றிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோபதிலாக, பாஜக ஒன்றிய அரசாங்கம் நாட்டின் தேசியசொத்துக்களையும் மக்களின் செல்வாதாரங்களையும் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் தனியார் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுப்பது தொடர்கிறது. இத்துடன் மதவெறித் தீயை மோசமான முறையில்விசிறிவிட்டு,  பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றம் சீர்குலைவு:  நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளநிலையில் இவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்எதையும் எடுப்பதற்குப் பதிலாக, பெகாசஸ் உளவுமென்பொருள் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்குப் பிடிவாதமான முறையில் மறுப்பதன்மூலம் ஆளும் பாஜக ஒன்றிய அரசாங்கம் நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஒன்றிய அரசாங்கம் அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ளபடி நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லமுன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பிடிவாதமான முறையில் மறுத்து வருகிறது.அதே சமயத்தில், நாடாளுமன்றத்தைச் சீர்குலைத்துக்கொண்டே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கிடையே,  பல்வேறு மக்கள் விரோத சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிக் கொண்டுமிருக்கிறது. இவை நாட்டின் பொருளாதார இறையாண்மையையே நீர்த்துப்போகச் செய்யக்கூடியவையாகும். இவற்றை ஏற்கமுடியாது. இவை எதிர்க்கப்பட வேண்டியவையாகும். 

பெகாசஸ் உளவு மென்பொருள்
ஒன்றிய அரசாங்கம், மக்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொள்முதல் செய்திருப்பது மிகவும் பயங்கரமானதாகும். இந்த அரசாங்கம் நேரடியாக ஒரு கேள்விக்குப் பதில்கூற மறுக்கிறது. பெகாசஸ் ராணுவ உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதற்காக, இணையவழி ராணுவஉளவு வேலைகளுக்காக உலக அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பினைத் தங்கள் அரசாங்கமோ அல்லது தங்கள் அரசாங்கத்தின் முகமைகளில் எதுவுமோ பயன்படுத்திக்கொண்டிருக்கிறதா என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் சொல்ல மறுக்கிறது. அரசாங்கம் இதற்குப் பதில் சொல்லிவிட்டு, தான் குற்றமற்றவர் என்பதை மெய்ப்பித்திட வேண்டும். இவ்வாறு உளவு பார்ப்பது என்பது மக்களின் அந்தரங்க அடிப்படை உரிமையை மீறும் செயல்மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும்ஏவப்பட்டுள்ள தாக்குதலுமாகும். இவ்வாறு பெகாசஸ்உளவு மென்பொருள் மூலமாக உளவு பார்த்த நபர்களில் அரசியல் தலைவர்கள், இதழியலாளர்கள், ஒருமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, நீதித்துறையின் அலுவலர்கள், ஒரு முன்னாள் சிபிஐ தலைமை அதிகாரி, ஒரு முன்னாள் தேர்தல் ஆணையர் முதலானவர்களும் அடங்குவர். இது தீய அறிகுறியாகும். இது தனிநபர்கள் மீதான தாக்குதல்களுடன், ஜனநாயகத்தில் சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்துள்ள பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் முக்கியமானபாத்திரங்களையும் சீர்குலைத்திடும் நடவடிக்கைகளுமாகும். அவற்றின் அரசமைப்புச்சட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதையும் பாதித்திடும்.இதன்பின்னே ஒளிந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவந்து, குற்றமிழைத்தவர்களைத் தண்டித்திட உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடவேண்டும்.

அதிகரித்துவரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் : வரலாறு படைத்திடும் விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு உற்பத்திச்செலவினத்துடன் சி.2 + 50 சதவீத உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட சட்டப்பூர்வ உரிமை கோரியும் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாகஇந்திய விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருவது என்பது சுதந்திர இந்தியா முன்னெப்போதும் சந்தித்திராத ஒன்றாகும்.அமைதியான இந்தப் போராட்டம் நாட்டு மக்களின் பல்வேறுதரப்பு மக்களிடமிருந்தும் ஒருமைப்பாட்டைப் பெற்றிருக்கிறது. இதேபோன்று நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் முடியும் வரையிலும் அதற்கு இணையாக ‘விவசாயிகள் நாடாளுமன்றமும்’ நடந்துகொண்டிருப்பதும், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது விரிவான அளவில் ஆதரவு இருப்பதைஉயர்த்திப்பிடிக்கிறது.

தொழிற்சங்கங்கள்-விவசாய சங்கங்கள்-விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டு இயக்கங்கள்
அதேபோன்று தொழிற்சங்கங்கள்-விவசாய சங்கங்கள்-விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இயக்கங்களை நடத்திக்கொண்டிருப்பதும்  நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டின் அடிப்படை உழைக்கும்மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் ஒரு வரலாறு படைத்திடும் நடவடிக்கையாகும்.

தொழிலாளர் வர்க்க நடவடிக்கைகள்
தனியார்மயத்திற்கு எதிராக, பல்வேறு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சார்பாக மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களும் நாடு முழுதும் ஆகஸ்ட் 4 அன்றுஒரு முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.மின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒட்டுமொத்தத் துறையினரும் முதன்முதலாக ஆகஸ்ட் 10 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதர பிரிவினர்: அதிகரித்துவரும் வேலையில்லாத்திண்டாட்டத்திற்கு எதிராக, காலியாகவுள்ள அரசுத்துறைப் பணியிடங்களை நிரப்பக்கோரி இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மாணவர்கள் கல்வி நிறுவனங்களை விரைந்து திறக்கவலியுறுத்தியும், பொதுக் கல்வியை வலுப்படுத்தக்கோரியும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதேபோன்று பெண்கள் பசி-பட்டினிக் கொடுமைகளுக்கு எதிராக மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கோரி, வீதியிலிறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

திரிபுரா : தாக்குதல்களை நிறுத்திடுக!
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் இடதுமுன்னணி ஊழியர்கள்மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கு கட்சியின் மத்தியக் குழுக் கடும்கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த வாரம்கமல்பூர் மாணிக்பந்தரில் கட்சியின் கமல்பூர் உட்கோட்ட அலுவலகத்தை தீவைத்துக் கொளுத்தி இருக்கிறார்கள். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர் ரஞ்சித் கோஷ் கமல்பூரில் கடுமையாகத் தாக்கப்பட்டார். பெலோனியா மற்றும் ஜிரானியா ஆகியஉட்கோட்டங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் ஆளுநரையும், முதலமைச்சரையும் சந்தித்து புகார் கூறியிருக்கின்றனர். இத்தகைய தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். ஆயினும், இதனையும் மீறி, காட்டாட்சி தொடர்கிறது.திரிபுராவில் எதிர்க்கட்சிகள் மீது இத்தகைய வெட்கித் தலைகுனிய வைக்கக்கூடிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடுமாறும் மாநில அரசாங்கத்தைக் கட்சியின் மத்தியக்குழு கேட்டுக்கொள்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள்பெற்று இந்தியாவிற்குப் புகழைக் கொண்டுவந்துள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. ஒலிம்பிக் தடகளப்போட்டியில்  இந்தியா  தங்கப்பதக்கம் பெற்று - வரலாறு படைத்திருப்பது இதுவே முதன்முறையாகும். ஹாக்கி ஆடவர் அணி, வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள அதே சமயத்தில், பெண்கள் அணி நான்காவது இடத்திற்கு வந்துமிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. மொத்தம் பதக்கம் பெற்றுள்ள ஏழு பேரில், பெண்கள் மூன்று பேர்என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.இந்திய வீரர்கள் இவ்வாறு மகத்தானமுறையில்செயல்பட்டிருந்தபோதிலும், மிகவும் குறைவான அளவிலேயே பதக்கங்கள் பெற்றிருப்பது நாட்டில் விளையாட்டுப் போட்டிகள் என்பவை எந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதையே காட்டுகிறது. ஒன்றிய அரசு அளவிலும் மாநில அரசாங்கங்கள் அளவிலும் விளையாட்டுப் பயிற்சிகளுக்குப் போதிய  வாய்ப்பு வசதிகள் செய்துதரப்பட வேண்டியது அவசியமாகும்.

பெண்கள் ஹாக்கி அணியின்மீது சாதியக் கறைபூசியதற்குக் கண்டனம்
பெண்கள் ஹாக்கி அணியின்கீழ் விளையாடிய வீராங்கனை வந்தனா கட்டாரியாவிற்கு எதிராக ஹரித்வாரில் சாதியக் கறை பூசியிருப்பதற்கு கட்சியின்மத்தியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த இழிசெயல்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு தினம்
இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு தினத்தின்போது சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பினை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்றுகட்சியின் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. நவீன இந்தியாவைக் கட்டி எழுப்புவதிலும், இந்தியா என்னும்சிந்தனையை ஒருமுகப்படுத்துவதிலும் கம்யூனிஸ்ட்கட்சியின் பங்களிப்புகளையும், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் சுதந்திரப்போராட்டத்தில் முற்றிலுமாக ஈடுபடாதது மட்டுமல்ல, மாறாக பிரிட்டிஷாருடன் முழுமையாக ஒத்துப்போனதையும், இன்றைய இந்தியாவில் அரசமைப்புச்சட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அரித்து வீழ்த்திட அது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

;