articles

img

பெண்களை மதிக்கும் கட்சியா பாஜக?

“பாரதிய ஜனதா கட்சி பெண்களை எப்போதும் மதிக்கும் கட்சி. பாரதிய ஜனதா கட்சி தான் பெண்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எப்பவுமே பெண்களை மதிப்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஈடு இணையாக யாருமே இருக்க முடியாது” என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் எல்.வேல்முருகன். அப்படியா? பின்னால் வருகிற ஒரு சில உதாரணங்களுக்கு என்ன பொருள் என்று அவர்தான் சொல்ல வேண்டும்.

#  காவிரி ஆற்றின் அருகே கரூரில் குளிக்கும் பெண்ணை வீடியோ படம் பிடித்த பாஜக மாவட்டத் தலைவர் சிவசாமி மீது வழக்கு.

#  சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்த பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

#   பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய குற்றவாளி அதிமுகவின் முக்கிய பிரமுகர் மகன் என்பதால் அனைவரும் விடுதலை.

#   பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார்.

#  மத்திய பிரதேச பாஜக அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்.

#   பஞ்சாப் மாநிலத்தில் பாஜக நிர்வாகிகளால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண் தற்கொலை.

#   உத்தரகண்டை சேர்ந்த பாஜக தலைவர் மீது அசாம் பெண் அளித்தபாலியல் புகாரின்பேரில் தில்லி காவல்துறை வழக்குப் பதிவு.

#  திருப்பதியில் இளம் பெண்ணை காரில் கடத்திச் சென்று லாட்ஜில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சீனிவாசம் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

#  மத்திய பிரதேச மாநிலம் சிமாரியா தொகுதி பெண் எம்எல்ஏ நீலம் அபய் மிஸ்ரா. பாஜகவைச் சேர்ந்த இவர் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், தனக்கும், குடும்பத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் பாலியல் துன்புறுத்தல்
கொடுப்பதாகவும், மிரட்டுவதாகவும் பேசியது பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அந்த பெண் எம்எல்ஏ வுக்கு ஆதரவாக நின்றது காங்கிரஸ் உறுப்பினர்களாகும்.

#  பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குப்பை தொட்டியை தொட்டதால் தீட்டாகிவிட்டது என்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கர்ப்பிணியை பாரதிய ஜனதா கட்சியினர் அடித்துக் கொலை செய்தனர்.

#  கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவின் செக்ஸ் காட்சி வீடியோ ஒளிபரப்பை பார்த்து நாடே சிரித்தது.

#   பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் குறைந்த வட்டிக்குபணம் தருவதாக கூறி 60க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

#  மகாராஷ்டிரா மாநிலம் கட்ரோலி மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் சக பயணிகளுக்கு மத்தியில் இளம் பெண்களை பாஜக செயலாளர் ரவீந்திரபாவ் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியது.

#   உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணிப் பெண்ணின் மகளை பாலியல் வன்புணர்ச்சி செய்த பாஜக எம்எல்ஏ மீது புகார்.

#   உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் தந்தை காவல்நிலைத்தில் மர்மமான முறையில் சாவு.

#   உ.பி. மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவின் மகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார்.

#   கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா நடிகை சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

#   பாஜக எம்எல்ஏ குல்தீப் சின்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி.

#  திரிபுரா மாநில பாஜக அமைச்சர் மனோஜ் கண்டி தேவ், சக பெண் அமைச்சர் ஒருவரிடம் பொது மேடையில் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

#  துப்புரவு பெண் தொழிலாளியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

#  வேலை கேட்டு வந்த பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவங்கள் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு தினசரி நாளேடுகளில் வெளியானவை. இது இன்னமும் நீள்கிறது.

இது மட்டுமல்ல...

#   ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில் மேலும் பல அதிர்ச்சி சம்பவங்களும் வெளியாகி உள்ளன.

#  பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த 48 எம்எல்ஏக்கள், மூன்று  மக்களவை உறுப்பினர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் இடத்தில் இருப்பதுபாரதிய ஜனதா கட்சியாகும். அடுத்த இடம் திரிணாமுல் காங்கிரஸ்
என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாநில வாரியாக கணக்கு எடுத்ததில் மகாராஷ்டிராவில் 12, மேற்குவங்கத்தில் 17 ஒடிசாவில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

#   பெண்களை தாக்குதல், கடத்துதல், கடத்தி திருமணம் செய்ய வற்புறுத்தல், பாலியல் பலாத்காரம், பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களை துன்புறுத்தல்.

#   பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை வாங்குதல் உள்ளிட்ட வழக்குகளை எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

#    இதில் வேடிக்கை என்னவென்றால் 51 உறுப்பினர்கள் தங்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக வேட்பு மனு தாக்கலின் போது பிரமாண பத்திரத்தில் ஒப்புக்கொண்டு இருப்பதும் இந்த ஆய்வறிக்கையில் வந்திருக்கிறது.

#    உலகின் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் மோடி ஆட்சி செய்து வரும் இந்தியாவுக்கு முதலிடம். 

#   இதுதான் பாஜகவினர் பெண்களை மதிக்கும் லட்சணமாகும்.  இந்த சம்பவங்களுக்கு ‘எல்போடு’ முருகன் என்ன சொல்லப்போகிறார்?

உங்கள் ஒவ்வொரு வாக்கிலும் ஒரு பெண் குழந்தையின் உயிர் உள்ளது. எனவே, இந்த நிலைமைகள் மேலும் தொடராமல் இருக்கவும் பெண் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்கவும் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக்கும் வாக்களிக்காதீர்!

கட்டுரையாளர் : சி. ஸ்ரீராமுலு

;