articles

img

பருத்திப்பூ - கு.மணி

பருத்திப்பூ

ள்ளியில் அன்று ஒரே பரபரப்பு தலைமை ஆசிரியை இன்பவல்லி அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தார். ஆசிரியப் பெருமக்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மாணவ மாணவிகள் பள்ளியை அலங்கரிப்பது வாயிலின் வெளியே வண்ணக் கோலங்கள் இடுவது என்று பள்ளியே சுறுசுறுப்பாக காலைஎட்டு மணிக்கே இயங்கிக் கொண்டிருந்தது.. ஜெயா டீச்சர் வரவேற்புரை மாலை மரியாதை எல்லாம் ரெடியா?கலெக்டர் வந்த வுடன் ஜே ஆர் சி :ஸ்கவுட் மாணவர்கள் வர வேற்க தயாராக உள்ளார்களா? முருகன் சார் விழாவிற்கு வருகின்ற சிறப்பு விருந்தி னர்களை மேடையிலையும் மற்றவர்கள் கீழே அமர்வதற்கு சேர் டெஸ்க் பெஞ்ச் எல்லாம்  போட்டாச்சா? பதைபதைப்பில் பேசினார் தலைமை ஆசிரியை இன்பவல்லி. மேடம் நீங்க எதைப் பற்றியும் கவலைப் படாதீங்க நாங்க பார்த்துக்கிறோம் ஆசிரி யர்களின் ஒட்டுமொத்த அறை கூவல் ஏய்...விழா நாயகி எங்கடி? டீச்சர்  செல்வி கிளாஸ்ல உட்கார்ந்து இருக்கா. கலை நிகழ்ச்சிக்கு எல்லாரும் ரெடியா ரெடி டீச்சர் டான்ஸ் ஆடறவங்க மேக்கப் போட்டுக்கிட்டு இருக்காங்க. வேகமா பாருங்கடி  10 மணிக்கு கலெக்டர்: சி இ ஓ எம் எல் ஏ: எல்லா சிறப்பு விருந்தினரும் வந்துடுவாங்க. ஏய்..பொண்ணுகளா சீக்கிரம் கோலத்த போட்டு முடிங்கடி ஆசிரியை வசந்தாவின் வேண்டுகோள். தம்பி அந்த பேனரை ஆபீஸ்ல இருந்து  எடுத்துட்டு வாங்கப்பா. மேடையில் கட்டிடு வோம். பேனரை எடுக்க நான்கைந்து மாண வர்கள் ஓட்டம் பிடித்தனர். நேரம் சென்று கொண்டிருந்தது பள்ளியின் உள்ளேயும் வெளியேயும் மைக் செட் முழங்கிக் கொண்டி ருந்தது. ஆமா பள்ளியில் என்னடா விசேஷம் ஆண்டு விழாவா? இல்ல பெரியவரே கலெக்டர் வராங்க எம்எல்ஏ வராங்க. அதுக்காடா இப்படி விழா கொண்டாடுறீங்க உங்களுக்கு விஷயம் தெரியாதா நம்ம ஸ்கூல்ல ஒன்பதாம் வகுப்பு படிக்கிற மாணவி ஓவியப் போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு வாங்கி இருக்கா. யாருடா அது? நம்ம வடக்குத்தெரு லட்சுமி  அக்கா மக தான்.. அட பாருடா இந்த சின்ன  பொண்ணு பரவாயில்லையே அப்பா இல்லாத  பொண்ணா இருந்தாலும் நல்லா வளர்த்தி ருக்காளே லட்சுமி. ஊர் பெரியவரின் புகழுரை.  தாத்தா ஸ்கூலுக்குள்ள போங்க பேரன்ட்ஸ் எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க. உள்ளூர் விஐபிகள் வரத் தொடங்கினர் ஜெ.ஆர் சி மாணவர்களின் வெல்கம் கிளாப் ஒலித்தது. சற்று தூரத்தில் சைலன்ஸ் பொருத்திய ஜீப் மற்றும் கார் வந்து கொண்டி ருந்தது. தலைமை ஆசிரியை ஆசிரியர் களுக்கு பயம் தொற்றிக் கொண்டது. சார் கலெக்டர் வந்துட்டாரு போல பிஇடி சார் பசங்கள ஒழுங்குபடுத்துங்க ஸ்கவுட் ஜெ ஆர்சி ஸ்டூடண்ட்ஸ் அலார்ட்டாக இருங்க. டீச்சர் எல்லோரும் வரிசையா நின்றுவரவேற்க தயாராக இருங்கள் தலைமை ஆசிரியரின் உத்தரவு ஒலித்தது. பிஇடி சாரின் விசில் பறந்தது மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் அமைதியாகினர் . கலெக்டர் எம்எல்ஏ என சிறப்பு விருந்தி னர் அனைவரும் தங்கள் கார்களில் இருந்து வந்து இறங்கினர். ஜே ஆர் சி மாணவர்களின் வெல்கம் கிளாப் விண்ணை அதிர வைத்தது. ஸ்கவுட் மாணவர்களின் வரவேற்பு பிரமிக்க வைத்தது மேடையில் அனைவரும் அமர்ந்த னர் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த செல்வியும்  அவளது தாய் லட்சுமியையும் அழைத்து தன்னருகே அமரச் செய்யுமாறு உத்தரவு  பிறப்பித்தார் கலெக்டர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மேடையில் அமர்ந்தனர்.  நிகழ்ச்சி நிரல் தொடங்கியது அனைவரும் எழுந்து நிற்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நான்கு மாணவர்களால் பாடப்பட்டது. அனை வரும் எழுந்து நின்று உடன்பாடினர். முதல் நிகழ்வாக வரவேற்புரையை தமிழாசிரியர் சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் நிகழ்த்தி னார். பின்பு மாலை மரியாதை சிலருக்கு  அணிவிக்கப்பட்டது. தனக்கு அணிவிக்கப் பட்ட சந்தன மாலையை எம்.எல்.ஏ செல்வி யின் கழுத்தில் அணிவித்தார். கரவொலி மேடையை அதிர்வைத்தது மாணவ மாணவி யரின் கலை நிகழ்ச்சி இடையிடையே நடந்தது. தலைமை உரையாக திருமதி இன்பவல்லி தலைமை ஆசிரியை பேசினார். பள்ளியின் பெருமைகளைப் பட்டியலிட்டார் இந்த விழா இன்று எதற்காக கொண்டாடப்படுகிறது என் பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். நம் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி வரைந்த” பருத்திப் பூ” என்ற ஓவியம்  தேசிய அளவில் முதல் பரிசினை பெற்றுள் ளது. இந்த சிறுவயதில் இப்படி ஒரு கற்பனை  திறன் அவருக்கு எவ்வாறு வந்தது என்று  நானே ஆச்சரியப்பட்டேன் என்று செல்வி யைப் பற்றி புகழ்ந்துரைத்தார். தன் பள்ளியின்  பெருமையை பறை சாற்றினார் மாணவர் களின் கைதட்டலுக்கு இடையே. சிறப்பு விருந்தினர்கள் சிலர் பேசினர். அடுத்ததாக சட்டமன்ற உறுப்பினர் பேச  அழைக்கப்பட்டார். அரசு பள்ளியின் பெருமை களையும் மாணவர்களுக்கு அரசு செய்து வரும் நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார். செல்வியின் சாதனையை அரசே கொண்டாடு கிறது என்று வீர முழக்கம் இட்டுபேசிய போது மாணவர்களின் கைதட்டலும் விசில் சத்தம் பறந்தது.  அடுத்ததாக மாவட்ட ஆட்சியர் உரை நிகழ்த்தினார் நானும் ஒரு பெண்.இங்கே விழா  நாயகியாக அமர்ந்திருக்கக் கூடிய செல்வி யும் ஒரு பெண். கேள்விப்பட்டேன் செல்வி சாதாரண ஏழை நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவர் என்று. திரு வி க அவர்கள் கூறுவார் “பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ “என்று.ஆம் :எத்தனை பூக்கள் இருந்தாலும் எல்லா பூக்களும் வாசம் தான் தரும் ஆனால் பருத்திப்பூ ஒன்று மட்டும் தான் மனிதர்களின் மானம் காப்பது. அப்படி ஒரு பருத்திப் பூவாக மலர்ந்து இருக்கின்றார் செல்வி. அவர் வரைந்த ஓவியத்தின் தலைப்பும் பருத்திப்பூ. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் எனக்  கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் செல்வியின் தாயை நான் வணங்குகின்றேன். செல்வி நீ என்ன படிக்க விரும்புகின்றாயோ அதை படி.  அத்தனை செலவையும் நான் ஏற்றுக்கொள் கிறேன். மேலும் இங்கே ஒரு முக்கியமான செய்தி செல்வி வரைந்த “பருத்திப் பூ “என்ற ஓவியம் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெறப்போகிறது என்பது. கலெக்டர் கூறிய செய்தியைக் கேட்டவுடன் பள்ளியே துள்ளிக் குதித்தது. செல்வியின் தாய் லட்சுமியை பேச அழைத்தார் கலெக்டர். அம்மா எனக்கு பேச தெரியாதும்மா சும்மா வாங்க உங்களுக்கு தெரிந்ததை பேசுங்க கலெக்டரின் அன்புக் கட்டளை. நா தள தளக்க பேசினார் லட்சுமி.எனக்கு  என்ன பேசுறதுன்னு தெரியல. என் பொண்ணு  வீட்ல ஏதாச்சும் கிறுக்கிக் கொண்டே இருப்பா.  அவங்க அப்பா செத்த போது ஆறு வயசு  அவளுக்கு. நாங்க படாத கஷ்டம் இல்ல.  நானே எத்தனையோ முறை திட்டி  இருக்கேன். படம் வரையாத ஒழுங்கப் படின்னு அவள்கேட்கவே மாட்டாள.யாரை பார்த்தாலும் அப்படியே வரைந்து விடுவா..  பக்கத்து வீட்ல இருக்கிறவங்க எல்லாம் பொம்பள புள்ள படம் வரைந்து என்ன ஆகப் போகுது ஒழுங்கா படிக்க வை.இதெல்லாம் எதற்காகப்போகுதுன்னு என் காது பட பேசுவாங்க. இப்பத்தான் எனக்கு புரியுது  பிள்ளைய மனசு அறுஞ்சு அவங்கள படிக்க விடுங்க . முன்னேறவிடுங்க நிச்சயம்  அவங்க நமக்கு பெருமை தேடி தருவாங்க.  இப்போ இவ்வளவு பெரிய பேரையும் புகழையும் என்பொண்ணு வாங்கியிருக் காண்ணா என்று சொல்லியபடி தேம்பித் தேம்பிஅழ ஆரம்பித்தாள் லட்சுமி. செல்வி யும் தேம்பித் தேம்பி அழுதாள். அனைவரது கண்களும் குளமாகியது. அனைவரின் அழுகையின் நடுவே செல்வியை பேச அழைத்தார் வரவேற்பாளர். செல்வின் கையில் மைக் கொடுக்கப்பட்டது. அம்மா அழாதீங்கம்மா நான் இந்த நிலைமைக்கு வர காரணம் நீங்களும் ஆசிரியர்களும் தான். “பருத்திப்பூ “என்ற தலைப்பு கொடுத்த உடனே எல்லோரும் பருத்திப் பூவை வரைஞ்சாங்க. ஆனா என் மனசுல தோன்றியது நீதான் அம்மா. ஒவ்வொரு நாளும் சவக்குழியான தார்குழி யிலே நீ நெஞ்சொடிந்து தறிநெய்கின்ற காட்சி என் கண் முன்னே நிழலாடியது அதைத்  தான் நான் வரைந்தேன் அம்மா. எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்.ஒரு நிமிடம் விழாமேடையே அழுது நின்றது. செல்விக்கு ரூபாய் 50000இக்கான காசோலை கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் சிலர் செல்விக்கு தங்களால்இயன்ற உதவிகளை செய்தனர். கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ரமேஷ் சார் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிது நிறைவு பெற்றது . மாவட்ட ஆட்சியர் செல்வியின் உச்சிமுகர்ந்து கன்னத்தில் முத்தமிட்டு விடை பெற்றார். செல்வி என்ற “பருத்திப்பூ” ஆனந்தக் கண்ணீருடன் பூத்து மலர்ந்து நின்றது.